பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

三2」20 திருக்குறட் குமரேச வெண்பா கறருன் உயிருற்ருன்; கல்லாதான் பொல்லாத வெற்றுடம்பே யாவன் விரிந்து. கல்லாமல் இருப்பது கடையாம். 898. பற்றிரளு முன்கவிகள் பாடினர் சம்பந்தர் குற்றமற என்னே குமரேசா-உற்ற ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து. (8) இ-ள் குமரேசா பல் முளேக்கும் பாலப் பருவத்திலேயே கல்வியில் சிறந்து ஞானசம்பந்தர் ஏன் கவிகள் பாடி ஒர்? எனின், ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் எமாப்பு உடைத்து என்க, இது, கல்வியின் தொடர்பை உணர்த்துகிறது. ஒரு பிறப்பின் கண் ஒருவன் கற்றுக் கொண்ட கல்வி ஏழு பிறவிகளிலும் உறுதியாய்த் தொடர்ந்து உரிமையுடன் அவனுக்கு இன்பம் புரிந்தருளும். தன்னே யுடையானே உலகம் எல்லாம் உவந்து போற்றும்படி கல்வி உயர்த்தியருளும் என முன்னர் உரைத்தார்; இதில், எழுமையும் தொடர்ந்து நின்று உரிமையாய் உயிர்க்கு அது உதவி புரியும் என்கிருர். ஒருமுறை கற்றது ஊழியும் உற்ற துனேயாய்த் தோய்ந்து உயர் இன்பம் வாய்ந்து வருகிறது. கல்வி உடைத்து = கல்வியறிவு உடையது. ஏமாப்பு=சேமமான பாதுகாப்பு. உள்ளக் களிப்பால் ஊர்ந்து வரும் உறுதி கிலேயை ஒர்ந்து தெளிய இங்கனம் இ.து உணர்த்தியுளது. எமம் =சேமம்: கரவல்: இன்பம். இதன் அடியாகப் பிறந்து ஏமாப்பு வந்துளது. ஏமாப்பு ஒருவற்கு மக்கட் பிறப்பு. (அற்நெறி, 142)