பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.128 திருக்குறட் குமரேச் வெண்பா தாம் இன்புற்று வருகிற கல்வியறிவுக்கு உலகத் தாரும் இன்புறுவதை நோக்கிக் கற்றுத் தெளிந்தவர் அதனே மேலும் மேலும் விழைந்து மகிழ்வர். தாம் என்றது பல நூல்களேயும் பயின்று தேர்ந்த புலவர்களே. அவரது இன்ப நுகர்ச்சியும் மகிழ்ச்சியும் இங்கே தெரிய வந்தன. அறிவின் சுவை அதிசய போக மாயுளது. அதனே நுகர் பவர் அமரராயுளர். கல்வி எழுமையும் ஏமாப்புடையது என முன்பு குறித்தார்; இதில் எவர்க்கும் என்றும் அது கிலேயாய் கின்று உலவா இன்பம் தரும் என்கின்ருர். செல்வமும் கல்வியும் மனிதருடைய இன்ப அனுப வங்களுக்கு இனமாயுள்ளன. இருப்பினும் இரு வேறு வகையாய்ப் பிரிவுற்று கிற்கின்றன. செல்வத்தை ஒருவன் சேர்ந்து அனுபவிக்குங்கால் மற்றவர் மகிழ்வ தில்லே. கல்வியை ஒருவன் கலந்து இன்புறுங்கால் எல் லாரும் சேர்ந்து இன்புறுகின்றனர். ஒர்ந்து உவந்து புகழ்கின்றனர். அரிய பண்பும் அதிசய இன்பமும் கல்வியின் கண்னேயே கணித் சுரத்திருக்கின்றன. செல்வத்தின் போகங்கள் தன்னலமுடையன. கல்வியின் போகங்கள் பலரும் ஒ நங்கே துகர்ந்து வர உயர்ந்து நிறைந்துள்ளன. அது மடமை மருள்களோடு گینی" – ′ = 与*リ f وك மருவி மடிகிறது; இது மதிநலன்களோடு பெருகி எவ் 2. _ _ a:Eگي ! வழியும் அதிசய சுகமாய் இனிது மிளிர்கிறது. அது வீன வழியில் விரிந்து படுகிறது. இது ஞான ஒளியில் நடந்து வருகிறது. அது பொறிவெறிகளில் புலேயாய் உழல்கிறது. இது அறிவு நெறிகளில் நிலேயாய் உயர்கிறது. அது அனுபவிக்கும் தோறும் குறைந்து போம். இது அனுபவிக்கும் தோறும் நிறைந்து வரும். அது உடலளவில் ஊர்ந்து வருகிற ஊனச்சுவை. இது உயிரோடு தோய்ந்து வருகிற ஞானச்சுவை.