பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தோராவது அதிகாரம் க ல் ல ா ைம. அ.தாவது எழுத்தறிவு பெற்றுக் கற்க வுரிய நூல் கtளக் கல்லாமல் கழிந்து நிற்கும் கிலேமை. என்றும் அழியாத விழுமிய செல்வம் ஆகிய கல்வியை இழந்தவன் இருகால் விலங்காயிழிந்து படுகிருன். பொல்லாத அந்த இழிபுலே நேராமல் நல்லகலையைப் பயின்றுமக்கள்மிக்க சிருடன் வாழவேண்டும் என்று உரிமையோடு உணர்த்து கின்ருர் ஆதலால் கல்வியின் பின் இதுவைக்கப் பட்டது. உடன்பாடும் எதிர்மறையும் அறிவுச் செல்வத்தின் உறுதி கலனேத் திடமா உணர்த்தி யுள்ளன. .01 வாட்டமிலாப் புத்தர் மணிவா சகரோடு கோட்டிகொண்டேன் தாழ்ந்தார் குமரேசா - நாட்டில் அரங்கின்றி வட்டா டி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். (க) இ-ள் குமரேசா நூலறிவு நிறையாத புத்தகுருக்கள் மாணிக்கவாசகரோடு வாது புரிந்து ஏன் இழிந்தார்? வானின், நிரம்பிய நூல் இன்றிக் கோட்டிகொளல் அரங்கு இன்றி வட்டு ஆடி அற்று என்க. இது, கல்லாதவன் சொல் செல்லாது என்கிறது. நிறைந்த நூலறிவு இல்லாதார் அவையில் பேச நேர்வது அரங்கு இல்லாமல் வட்டு ஆடியது போலாம். அரங்கு = அறை: வரம்பு. வட்டு = வட்ட வடிவமான சிறு விளேயாட்டுக் கருவி. சிறு பிள்ளேகள் தரையில் கோடுகள் கீறி அறைகள் அமைத்து வட்டைவீசி விளேயாடுவர். நடுவே இடம் விட்டு அருகே வரம்புசெய்து வரைந்தது அரங்கு எனவந்தது. அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள் தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?