பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கல் லா ைம 2207 மதிப்பு ஒழிந்து போகிறது, இனிய நீர்மை யில்லாமல் வெறும் சார்பினால் மாத்திரம் எவனும் மேன்மை அடைய முடியாது. உள்ளம் ஒளியால் உயர உலகில் உயர்கிருன். கல்வி உயிரை ஒளி செய்து உயர்த்துகின்றமை யால் உடல் அளவில் உள்ள பிறப்பின் உயர்வினும் அது மிக்க சிறப்பினே வியன அருளுகிறது. ஒளியுடைய விழிபோல் எழிலும் இன்பமும் கல்வி தருதலால் கற்றவன் எங்கும் மேலானவய்ை மேவி மிளிர்கின் ருன். கண் அனேய கல்வியை இழந்தவன் பழிபடிந்த குருடய்ை இழிவடைந்து கழிகின்ருன். பிறப்பில் மனிதன் ஆயினும் கற்றவன் தெய்வ கிலேமையில் தலைமையாய்ச் சிறந்து எ வி வழி யு ம் உயர்ந்து யாவரும் புகழ்ந்து வரத் திகழ்ந்து வருகின்ருன். தேவரே கற்றவர்; கல்லாதார் தேருங்கால் பூதரே; முன்பொருள் செய்யாதார்-ஆதரே; துன்பமி லேம்பண்டு யாமே வனப்புடையேம் என்பார் இருகால் எருது. (சிறுபஞ்சமூலம் 20) கற்றவர் தேவர்களே கல்லாதவர் பிசாசுகளே எனக் காரியாசான் இவ்வாறு கூறி யிருக்கிருர். கல்வி யைப் பேணினவன் பெருமகிமை பெறுகின்ருன்: பேணு மல் இழந்தவன் பேரிழவுடையய்ை இழிந்து யாண்டும் எள்ளி இகழப் படுகின் ருன். கல்வி மனிதனேத் தெய்வமாக்குகிறது: கல்லாமை அவ&னப் பேயாக்கி விடுகிறது. தன்னேயுடையவனே த் தேவன் ஆக்கியருளுகிற கல்வியை ஆவலோடு ஒருவன் கல்லாமல் இருப்பது எவ்வளவு கேடு: எத்துணே மூடம்: கல்வியாகிய கண்ணேயுடையவன் கடவுளே நேரே கண்டு உள்ளம் உருகி உறவாடி உரிமையுடன் உயர்ந்தும் பேரின்ப வெள்ளம் பெருகிவர உய்தி பெறுகிருன்.