பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2208 திருக்குறட் குமரேச வெண்பா கல்வியெலாம் கற்பித்தாய்! நின்பால் நேயம் கானவைத்தாய்! இவ்வுலகம் கானல் என்றே ஒல்லும்வகை அறிவித்தாய்! உள்ளே நின்றென் உடையானே நின்அருளும் உதவு கின்ருய் ! இல்லே எனப் பிறர்பால் சென்று இாவா வண்ணம் ஏற்றம் அளித் தாய் இரக்கம் என்னே! என்னே! செல்வ.அருட் குருவாகி நாயி னேனேச் சிறுகாலே ஆட்கொண்ட தேவ தேவே! (அருட்பா) கல்வியால் இராமலிங்க அடிகள் கண்டுள்ள காட்சி களேயும் மாட்சிகளேயும் இதில் கண்டு கொள்ளுகிருேம். மெய்யறிவை எய்தி உயிர் உய்தி பெறக் கல்வி ஒளி புரிந்து வருதலால் அது சீவ சஞ்சீவியாய் மேவி யுளது. ஆன்ம ஒளியாய் அமைந்துள்ள கல்வியை உரிமை பாப் பெற்றவர் அதிசய மேன்மைகளே யெல்லாம் எளிதே எய்தி எவ்வழியும் மகிழ்ந்து திகழ்கின்ருர். கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. (நெடுஞ்செழியன்) மேல் குலத்தில் பிறந்தும் கல்லாத ஒருவன் கீழ்க் புகுலத்தில் பிறந்து கற்றவனிடம் தாழ்ந்து கிற்பன் என் னும் இது இங்கே கூர்ந்து ஒர்ந்து உணரவுரியது. நாற்பால் குலத்தில் மேற்பால் ஒருவன் கற்றிலன் ஆயின் கீழிருப் பவனே. (1) L. so i. ና m (3 ר # எககுடி பிறப11:னும யாவ15 ஆயினும அக்குடியில் கற்ருேரை மேல்வரு கென்பர். (32) அறிவுடை ஒருவனே அரசனும் விரும்பும். (3) (நறுந்தொகை) அதிவீர ராமபாண்டியன் என்னும் மன்னன் இன்ன வாறு குறித்திருக்கிருர். மேல் பிறந்தும் கல்லாதவர் கீழ்ப் பிறந்தும் கற்றவர் போல் பெருமையுருர் என்னும் இந்த அருமைக் குறளேக் கருதியே இவை உருவாகி வந்துள்ளன. உண்மையை ஊன்றி உணர்ந்து கொள்க.