பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2248 திருக்குறட் குமரேச வெண்பா னன் என்று வியந்து புகழ்ந்தனர். செவியுணவின் கேள்வி யுடையார் அவியுணவின் அமரர் போல்வர் என் பதை உலகம் காண இவன் நேரே உணர்த்தி நின்ருன். யாவரே யாலுைம் ஆன் றமைந்த கேள்வியார் தேவரே யாவர் சிறந்து. கேள்வி மனிதனேத் தேவன் ஆக்கும். == H 414. தேர்ந்தாள்முன் கோதமியும் சித்திர கே தும் கேட்டுக் கூர்ந்த துன்பேன் தீர்ந்தான் குமரேசா-சார்ந்துநின்று கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற் கொற்கத்தின் ஊற்ரும் துனே. (ச) இ-ள் குமரேசா கல்லாத கோதமியும் கேள்வியால் தேர்ந் தாள், சித்திரகேதுவும் ஏன் துன்பம் தீர்ந்தான்? எனின் கற்றிலன் ஆயினும் கேட்க: அ.து ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்ரும் துனே என்க. கேள்வி அல்லல்களே நீக்கியருளும் என்கிறது. கல்லாதவன் எனினும் கல்லோர் கூறுவதை கயங் து கேட்க வேண்டும்; அக் கேள்வி ஒருவனுக்கு மெலிவின் கண் வலிய உதவியாம். ஆயினும் என்றதில் உள்ள உம்மை கல்லாமல் கழிந்து நின்ற அந்த இழிவை நினேந்து பரிந்து வந்துள் ளது. உள்ள ப் பரிவு வேறு ஒரு உறுதி கிலேயை அவனுக்குத் தெளிவாக உணர்த்தியருளியது. எல்லாரும் இளமையிலேயே வளமையாய்க் கற்றுக் கொள்ள வேண்டும்; கல்லாமல் யாரும் அயர்ந்து கிற்க லாகாது; அவ்வாறு மூடமாய் கின்ருல் அது கொடிய பீடையாம்; மனிதப் பிறப்பும் மாட்டுப் பிறப்பாயிழிந்து படும் என்று கல்லாமையால் நேரும் பொல்லாங்குகளே முன்னம் நன்கு போதித்துள்ளார். அந்தப் போதனைகளே உணர்ந்து சாதனை செய்து கொள்ளாமல் பேதைகளாய்