பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2269 பையல் என்றது யானேயை அடக்கும் கருவியாகிய அங்குசத்தையுடையவன், அழகிய குசப்பையன் என இரு பொருள்பட விடை வீறுடன் விரைந்து வந்தது. அதன் பின் வேளாளன் வந்தான்; விநயமொழி தந்தான். அவனது கவி அமைதி தோய்ந்து வந்தது. கோக்கண்டு மன்னர் குரை கடற் புக்கிலர்; கோக நகப் பூக்கண்டு கொட்டியும் பூவரது ஒழிந்தில; பூதலம்ஏழ் காக்கின்ற மன்னன் கவி ஒட்டக் கூத்த நின் கட்டுரையாம் பாக்கண்டு ஒளிப்பர்க ள்ோதமிழ் பாடிய பாவலரே? (வாணன்) மூன்ருவது கருமான் புகுந்தான்: கவி ஒன்று சொன்னன். அவன் பாட்டு படுவேகமா மூண்டது. செல்வன் புதல்வன் திருவேங்கடவன் செகத்குருவரும் கொல்லன் கவியைக் குறைசொல்லுவோரைக் குறடுகொண்டு பல்லேப் பிடுங்கிப் பருந்தாட்டம் ஆடிப் பகைவர் முன்னே அல்லும்பகலும் அடிப்பேன் கவிஇருப்பு ஆணி கொண்டே. (திருவேங்கடவன்) நான்காவது அம்பட்டன் எதிர்ந்தான். அவனுக்கு ஒரு கண் குருடு. ஆதலால் அதனைச் சுட்டிக் காட்டி ஒட்டக்கூத்தர் வெருட்டி மருட்டி விறுடன் கூறினர்: விண்பட்ட கொக்கு வல்லுாறு கண்டு என்ன விலவிலத் து புண்பட்ட நெஞ்சொடும் இங்கு நின்ருய் பொட்டையாய்! புகலாய்! இப்படி அவர் அதட்டித் திட்டிக் கேட்கவே இவன் அந்தப் பாதிப் பாட்டைப் பதமாக ஒட்டி மோதி உரைத் தான். அவன் கவி அக்கவிஞனேக் கடிந்து வந்தது. கண்பொட்டை ஆயினும் அம்பட்டன் நான்கவி வாணர் முன்னே பண்பட்ட செந்தமிழ் நீயும் திடுக்கிடப் பாடுவனே. (சீதரன்) ஐந்தாவது தச்சன் உற்சாகமாய் அடைந்தான். ே என்னபாடுவாய்? என்று அவர் ஏளனமாய்க் கேட்டார். உடனே அவன் உன்னதமாய்க் கவி ஒன்று பாடினன். சொன்ன சந்தக்கவி யாவரும் சொல்லுவர் சொற்சுவைசேர் இன்ன சந்தக்கவி ஏது? என்ற போதில் எதிர்த்தவரை வன்ன சந்தம் கெட வாயைக் கிழித்து இந்த வாய்ச்சியில்ை கன்ன சந்தங்களினில்கவி ஆப்பைக் கடாவுவனே. (முத்தன்).