பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அறிவு ைட ைம 23 17 அறிவுடையார் சொல்ல வல்ல நீர் மைகளே கல்லாத ர்ை இவ்வாறு கூறியுள்ளார். நுண்பொருள் காண்பது அறிவு என்றதை அடியொற்றி இது வந்துள்ளது. நுண் மையா சோக்கி உண்மையைக் காண்பவன் திண்மை யான தெளிந்த காட்சியாளய்ைச் சிறந்து திகழ்கிருன். பிறர் தெளிந்து மகிழச் சொல்லுக; அவர் வாப் மொழியின் பொருளேக் கூர்ந்து தேர்ந்து கொள்ளுக என்று இருவகை கிலேகளைத் தெளித்துள்ளார். வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன் கோடல் மாட்சியின் மாசற்ருர் கோள். (குறள் 646) பின்னரும் இன்னவாறு கூறியுள்ளார். அறிவுடை மைக்கும், சொல்வன்மைக்கும் உள்ள உறவுரிமைகளே ஊன்றி நோக்கி ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். பிறர் தெளிவின்றிப் பேசினும் நீ தெளிவாய் உணர்: எதையும் தெளிவாக எவர்க்கும் நீ உணர்த்து என அறிவுறுத்தி யுள்ளார். அறிவைச் சரியாக அளந்து அறிதற்கு உரை சிறந்த உரைகல்லா யுள்ளது. ழிந்தவன் உயர்ந்தது ஒன்ை இயம்பினும், உயர்ந்தோன் வாயில் இழிந்: நதது ஒ ID இl நதே இழிந்ததொன் றுறினும், உள்ள இயல்பறிந்து ஓம்பி நீக்கிப் பொழிந்தெனப் பிறர்தாம் கூறும் புலப்படாப் பொருளும் தெள்ளி வழிந்தெனத் தெளியக் கேட்போர் மனங்கொளப் புகறல் வேண்டும். (விநாயகபுராணம்} எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அதன் மெய்ப் பொருள் காணுக: எண் பொருளவாகச் செலச் சொல் லிப் பிறர் வாய் நுண் பொருளே நுனித்து அறிந்து கொள்ளுக என்பதை இது கருதி வந்துள்ளது. அவ் வுண்மையை உரைகளில் உணர்ந்து கொள்ளலாம். ஒருவனுடைய கல்வியின் ஏற்றமும், அறிவின் ஆற்றலும் அவ ன் பேசுகின்ற சொல்லாற்றலால் வெளியே தெரிய வருகின்றன. வாய் மொழியில் தெளி வும் செறிவும் நயமும் இல்லேயால்ை அவனுடைய அறிவு இழிவாய்க் கழிந்து வழுவா எண்ணப் படுகிறது.