பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2336 திருக்குறட் குமரேச வெண்பா அஞ்சாமை பேதைமை என்ருர். தனக்கு ஏதத்தை, விளேத்துக் கொள்பவன் பேதையா யிழிகின்ருன். அறிவுடையார் அன்றி அதுபெருர் தம்பால் செறிபழியை அஞ்சார் சிறிதும்-பிறைநுதால் வண்ணம்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக் கண்ணஞ்சு மோஇருளேக் கண்டு? (நன்னெறி 34) கண் உடையவரே இருளேக் கண்டு அஞ்சுவர்;. குருடர் அஞ்சார்; அதுபோல் அறிவுடையவரே பழிக்கு. அஞ்சுவர்: மூடர் அஞ்சார் எனச் சிவப்பிரகாசர் இங்ங். னம் குறித்திருக்கிரு.ர். இந்தக் குறளின் பொருளேத் தெளிவா விளக்குதற்கு ஒரு விரிவுரை போல் உவமை யோடு இது விளங்கி யுளது. குறிப்பைக் கூர்ந்து காண் பவர் இதன் சிறப்பைத் தேர்ந்து தெளிந்து கொள்வர். இழி பழிக்கு அஞ்சுபவர் விழுமிய மேதைகளாகின் ருர்; அவ்வாறு அஞ்சாதவர் பழி படிந்த பேதைகளாய்ப் பாழ் பட்டு எவ்வழியும் அழிவடைகின்றனர். தீவினேயார் அஞ்சார் ; விழுமியார் அஞ்சுவர்; இது ஈண்டு எண்ணி யுணர வுரியது. அஞ்சுபவர் கிலேயையும் அஞ்சாதவர் புலேயையும் இதில் கூர்ந்து ஒர்ந்து உறுதி நல&னத் தேர்ந்து கொள்கிருேம். அஞ்சாமை வேந்தற்கு இயல்பு. (குறள் 382) இறை மாட்சியில் இங்ங்னம் குறித்துள்ளார். நல்ல வழியில் ஊக்கி நிற்கும் உள்ளத் திண்மையான அது அறிவு நலம் கனிந்தது. இது அதைேடு மிகவும் மாறு பட்டது. பழி வழியில் திமிர்ந்து செல்லும் மூர்க்கம் ஆதலால் இது முழுமூடம் என இழிவுற நேர்ந்தது. நள்ளிருளில் தன் உயிர்க்கு நேரும் அழிவுகளேயும் மறந்து கள்ளன் களவு செய்ய அஞ்சாமல் செல்கின்ருன். அக்த அஞ்சாமை நீசமும் காசமும் உடையது: மூடக்