பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*2344 திருக்குறட் குமரேச வெண்பா அறிவில்ை மாட்சியொன் றில்லா ஒருவன் பிறிதினுல் மாண்ட தெவனும்?-பொறியின் மணிபொன்னும் சாந்தமும் மாலேயுமற் றின் ன அணியெல்லாம் ஆடையின் பின். (பழமொழி 271) அறிவில்லாதவன் பொன் மணி முதலியன என்ன பெறினும் இழிவுடையனே; அவன் விழுமியன் ஆகான் என இப்பழமொழி தெளிவாக் குறித்துளது. ஆடை யில்லாதவன் அழகிய ம ணி ய னி க ள் அணிந்து வெளியே வரின் அவன் இளிவாய் எள்ளி யிகழப்படுவான்; அது போல் அறிவில்லாதவன் பெரிய பொருள்களுடையயிைனும் அவன் மருளய்ை இழிக்கப் படுவான். ஆடை யுடையவன் மானமுடையவய்ை எங் கும் மேன்மையுடன் செல்லலாம்; அது போல் அறி வுடையவன் யாண்டும் மகிமையுடையய்ை ஒளி மிகுந்து உயர்வடைந்து திகழுவான். அறிவுக்கு உவமையாய் வந்துள்ள ஆடையின் அரிய நயன்களேயும் உரிய வியன் களேயும் ஈண்டு நாடியறிந்து கொள்ள வேண்டும். 1. அறிவு 1. அறியாமை 2. உணர்வு 2. மடமை 3. மதி 3. மூடம் 4. புத்தி 4. மதிகேடு 5. யூகம் 5. பேதைமை 6. விவேகம் .ே அவிவேகம் 7. ஞானம் 7. அஞ்ஞானம் அறிவுடைமைக்கும் அறிவின் மைக்கும் இவ்வாறு: பெயர்கள் அமைந்துள்ளன. இவற்ருல் அவற்றின் இயல்புகளே ஒர்ந்து நன்கு உணர்ந்து கொள்ளலாம். அறிவிலி, மடையன், மூடன், பேதை, மதிகேடன். அவிவேகி, அஞ்ஞானி என ஒருவனேக் குறித்துக் கூறின் அவன் செயிர்த்துச் சீறுவான். அறிவாளி என்று பெயர் பெறவே எவனும் எவ்வழியும் ஆவலாய் விரும்புகிருன்.