பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.56 திருக்குறட் குமரேச வெண்பா கொடை அருள் நீதி பணிவு பண்பு செங்கோல் முறைமை முதலிய விழுமிய தகைமைகள் வேந்தனுக் குச் சிறப்பான உயர்ந்த பிறப்புரிமைகளாம். இறை மாட்சிகள் இவ்வாறு காட்சிக்கு வங்துள்ளன. ஈகை அரசனே ஒளி செய்து உயர்த்தும்: உலோபம் அவனைப் பழியாளனுக்கித் தாழ்த்தும். தனக்கு ஏதமாகப் இழிவு தருகிற இவறலே ஒழித்த அளவே அவன் சிறந்த கோமகனுய் உயர்ந்து ஒளி மிகுந்து திகழ்கிருன். இவறலே முதலில் வைத்தது, அதன் இழிவைத் தெளிவாக்க. ஈதல் எவ்வளவு மதிப்புடையதோ, அள் வளவு அவமதிப்பை இவறல் அடைந்துள்ளது. ஈயாத உலோபி உயிரோடு வாழ்ந்தாலும் அவனேச் செத்த சவ மாகவே யாரும் எண்ணுவர். யாதும் பயன் படாமை யால் பழி படிந்தே அவன் இழிந்து கழிந்து அழிந்து ஒழிந்து போகிருன். அவன் கிலே நெடிய புலேயே. ஆட்டின் கழுத்தில் அலேமுலே போல்உலோபன் நாட்டில் உருவாகி நண்ணினும்-நீட்டியவன் ஒர்பயனும் இன்றி உறைதலால் பூமிக்கு நேர் சுமையே யாவன் நெடிது. இவறலுடையவன் இவ்வாறு இழிந்து படுதலால் அவன் ஒழிந்து போதலேயே உலகம் உவந்து வருகிறது. இதில் குறித்துள்ள உவமானத்தைக் கூர்ந்து கோக்கிம் பொருள் நயங்களே ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண் டும். பயன் இழந்த அளவு பழி படிந்து கொள்கிறது. மாந்தரை ஆள நேர்ந்த அரசன் புலேயான இழிவு களே ஒழித்து கிலேயான நன்மைகளைச் செய்துவரின் அவனே உலகம் எவ்வழியும் உவந்து போற்றி வரும். கொலேகடிந்து இவறல் இன்றிக் கோத்தொழில் நடாத்து மன்றே. (சீவகசிந்தாமணி 2583) இவறல் இன்றி ஒரு மன்னன் முறை புரிந்துள்ளான். அவ்வுண்மையை இதில் ஊன்றி உணர்ந்து கொள்ளு. கிருேம். உதவி புரியாதவன் ஊனமாய் ஒழிகிருன்.