பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. கல்வி 2079 கழுத்து அரிந்து கருமமலத் தலையைவிசும்: கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே! மோன வெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே! (அருட்பா} இந்தக் கவியின் சுவையைக் கருதிக் காணுங்கள். பொருள் நயங்களேக் கூர்ந்து ஒர்ந்து கொள்பவர் உள்ளம் உவந்து உயர்வர். எழுத்து அறிவு எவ்வளவு பேரின் பங்களுக்கு மூலமாயுள்ளது என்பதை இதில் உணர்ந்து வியந்து மகிழ்ந்து கொள்கிருேம். முகத்தில் கண்போல் கல்வி அகத்தில் ஒளிசெய்து உயிரை உயர்த்தியருளுகிறது. உய்தி நலம் உதவித் தெய்வநிலை யருளுகின்ற மெய்யான கல்வியை உரிய பருவத்தே பிரியமாய்ப் பேணிக் கொள்ள வேண்டும். நண்ணிய நல்ல கல்வியாளர் எண்ணிய நலன்களே எய்தி யாண்டும் கண்ணியம் அடைந்து மகிழுவர். இவ் வுண்மை வீரராகவன் பால் விளங்கி நின்றது. ச ரி த ம் விரராகவர் என்பவர் தொண்டை நாட்டிலே பொற் களங்தை என்னும் ஊரில் இருந்தவர். இவரது காலம் இற்றைக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னராகும். வேளாளர் மரபினர். இவருடைய தந்தை பெயர் வடுக நாத முதலியார். இளம் பருவத்திலேயே இவர் கண் ஒளி இழந்தனர். மிக்க நுண்மதியாளர். நோக்கிப் படித் தற்கு நோக்குகள் இல்லையே என்று தம் கிலேமையை நினேந்து கினேந்து இவர் நொந்தார். இவரது கலேபயில் ஆர்வத்தைப் புலவர் ஒருவர் அறிந்து சில கவிகளே இவ ரிடம் வாய்ப்பாடமாகக் கூறினர். அவை முழுவதும் இவர்க்கு மனப்பாடம் ஆயின. இவரது மனன சத்தி அதிசய கிலேயில் அமைந்து இருந்தது. எத்தகைய பாடல்களேயும் ஒருமுறை கேட்டவுடனே மறுபடி திருப் பிச் சொல்லி விடுவார். எழுத்து முதலிய ஐவகை இலக் கணங்களேயும் பலவகைக் காவியங்களேயும் யாதொரு