பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2502 திருக்குறட் குமரேச வெண்பா கருதி முதல் இழக்கும் காரியத்தை அறிவுடையார் புரியார் என்பதை உலகம் தெரிய இவன் உணர்த்தி கின்ருன். விரிவை மார்க்கண்டேயத்தில் காண்க. பொருள்வரவை எண்ணிப் புலைவினையைச் செய்யார் தெருளறி வாளர் திரிந்து. நசையால் வசை யுருதே. 464. பண்டு தெளியாமல் பாண்டியனேன் வேடனிடம் கொண்டிலைேர் தண்டம் குமரேசா-கண்டு தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பா டஞ்சு பவர். (3*) இ-ள். குமரேசா! தெளிவில்லாத வினையைப் பாண்டிய மன்னன் ஏன் தொடங்காமல் நின்ருன்? எனின், இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் தெளிவு இலத&னத் தொடங்கார் என்க. இழிவாகிய பழி விளேவுகளே அஞ்சுகின்ற மேலோர் தெளிவில்லாத காரியத்தை யாதும் செய்யத் துணியார். நன்ருக ஆராய்ந்து தெளிந்து உறுதியாய்த் தேர்ந்து கொண்டது தெளிவு என வந்தது. தன் நிலை, தான் செய்ய நேர்ந்த தொழில் நிலை. அதனே இனிது முடிக்கும் வழி வகை முதலிய நிலைமை களேயெல்லாம் தலைமையாக ஆராய்ந்து ஒர்ந்து தேர்ந்து கொள்வதே சிறந்த வினையாண்மையாம். இத்தகைய தேர்ச்சி யுடையவர் தாழ்ச்சி யுறும்படி எதையும் எவ் வகையிலும் யாண்டும் செய்யார். ஊறுசேர் வினையைப் புரிதரார்; ஊழால் ஊறுவந்து அடுப்பினும் கலங்கார்; தேறுகா ரியத்தை முடிப்புழி யன்றிச் செயல்மொழி யாதியால் இடையே வேறுபோமாறு விளக்குருர்; துணிந்த வினேதுளங் காதுவல் விரைவார்;