பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொங்து செயல் வகை 2507 பகைவரைத் தொகையா வெலல வேண்டியவன் முன்னதாக அதற்கு வேண்டிய வகைகளே முழுவதும் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும் என்றதல்ை தெரிந்து செயல் வகையில் வேந்து வினே சிறப்பாகத் தெரிய வந்தது. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு. (குறள், 878) தன்னை வெல்ல வேண்டும்என்று தன்மேல் மூண்டு வருகிற பகைவரை வேந்தன் வென்று தொலைக்கும் வகையை இது நன்கு விளக்கி யுளது. வகைஅறச் சூழ்ந்து எழுக என்பது இங்கே தெரிய வந்தது; வகை அறிந்து தற்காக்க என்பது அங்கே அறிய நின்றது. இந்த இரண்டுக்கும் உள்ள இனத்தை யும் வினைத்திறன்களேயும் நுனித்து உணர்ந்து கொள்க. பாத்தி=சிறு விளே நிலப்பகுதி. பயிர்கள் செழித்து வளர்தற்கு இதமாக நிலத்தில் சிறு சிறு பகுதியாப் பகுத்து வகுத்து அனே கோலி நீர் கிலேத்து வரப் பதமா வைத்திருப்பது பாத்தி என வந்தது. பாத்தியுள் நீர் சொரிந்தற்று. (குறள், 7.18) கரும்பு நடு பாத்தி. (ஐங்குறுநூறு, 65) கரும்பின் பாத்தி. (புறம், 386) இவற்றுள் பாத்தியின் வளமையை அறிகிருேம். வகுத்தது வகை: பகுத்தது பாத்தி. இந்த இரு வகை நிலைகளும் தொகையாய்த் தெரிய வந்தன. வகை தெரியாமல் பகையை வெல்ல எழுவது மாறுபாடான மிகையாம். ஆறு = வழி: நெறி. எழுதல் ஆறு என்றது. அந்த எழுச்சி பகைவர்க்கு வளர்ச்சியாய் வருதல் தெரிய வந்தது. யாதும் எண்ணு மல் சும்மா அயர்ந்திருந்த ஒன்னர் வகையற்ற இந்த விண் கிளர்ச்சியால் விழிப்படைந்து படைத்துணேகளைப் பெருக்கி வலியடைந்து நன்கு உயர்ந்து கொள்ளுவர்.