பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.20 திருக்குறட் (கமாேச வெண்பா ரவாய அமைந்து நின்று கிலேயாக நேரே பாதுகாப்பி னும் பழுதாய் இழிவுறும். முன், எண்ணித் துணியாத கருமம் இழுக்குறும் என்ருர், இதில், வழிமுறையே செய்யாதது பழுதாம் என்கிருர். நெறி தவறின் நெடிய துயரமாம். ஆற்றின் = நேரான வழியில். ஆறு = நெறி; ஒழுங்கு. உரிய சாதனங்களோடு ஒரு கருமத்தைச் சரியாகச் செய்தால் அது இனிது நிறைவேறும். அவ்வாறு செய்ப வரே தெரிந்து செயல் வகையில் சிறந்தவராய் உயர்ந்து திகழுவர். அங்கனம் செய்யாதவர் பொருளும் உழைப் பும் காலமும் வறிதே யிழந்து வெறியரா யிழிவுறுவர். தன் வழியை ஒருவன் தவறிவிடின் அவன் க ரு தி ய ஊருக்கு நேரே போகமுடியாது; அதுபோல் வழிமுறை களே வழுவினவன் கருமம் பழுதாப் அலமாலுறுவன். வருக்தா வருத்தம் என்றது முறையோடு நன்கு முயலாத முயற்சியை உடல் வருங்தி உள்ளம் உளேந்து வருந்திச் செய்வது ஆதலால் முயற்சி வருத்தம் என வந்தது. உழைப்பு, பாடு என்பனவும் ஈண்டு இனமாய் எண்ணி உணர வுரியன. ஒரு தொழில் எழிலோடு முடிய வேண்டுமானுல் அதனை வழிவகையோடு கவனமர்ய்ச் செய்யவேண்டும்; அவ்வகையில் செய்யாதது எவ்வகையிலும் அவலமாம். வருத்தம் பொத்துப்படும் என்றது கருமக் கேட்டைக் கருதியுணர. காரியக் கேடும் கருத்தாவின் கேடும் இதில் அறிய வந்தன. வழி முறை தெரியாமல் செய்பவன் தொழிலேயும் கெடுத்துத் தானும் அழிகேடய்ை இழிந்து துயருறுவான் என்பது இங்கே வெளியாகி நின்றது. பொய்படும் ஒன்ருே புனே பூணும் கையறியாப் பேதை வினே மேல் கொளின், (குறள், 836) செய்யும் முறைமையைச் ச ரி யாகத் தெரியாத பேதை வினேசெய்ய நேர்ந்தால் கருமத்தையும் கெடுத்து