பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.14 திருக்குறட் குமரேச வெண்பா அரிதாக வந்து வாய்த்த நேரம் கிலேத்து நில்லாது ஆத லால் அது உள்ளபொழுதே உரிய வினையை விரைந்து செய்து அரிய பயனே அடைந்து கொள்ள வேண்டும். எய்தல்=முயன்று பெறுதல். இயைதல்=தாகை வந்து அமைதல். கடலில் அலேபோல் உலக வாழ்க்கையில் காலம் ஒடிக்கொண்டேயிருக்கிறது. அதனே யாரும் நிறுத்தி வைக்க முடியாது. அது நடந்து கொண்டிருக்கும்போதே தொடர்ந்து தன் காரியத்தை முடித்துக் கொள்பவன் கரும வீரனுப்ப் பெருமை மிகப் பெறுகின்ருன். தன் உடல் வலி படை வலி பொருள் வலி முதலிய வற்ருல் செய்ய முடியாத காரியத்தைக் காலத்தின் உதவியால் மனிதன் செய்து கொள்கிருன். அவரவரு டைய நிலைமைகளுக்குத் தக்கபடி கருமங்கள் வேறுபடு: கின்றன. பகைவரை வென்று தகைமையுடன் வாழ்வது அரசரது கடமையாயுளது. தாம் வெல்ல முடியாமல் வீறுகொண்டிருந்த செறுநரை நல்லகாலம் வந்து வாய்த் தால் ஒல்லேயில் அவரை வென்று தொலேத்து வேந்தர் விவேகமாய் உயர்ந்து கொள்ளுகின்றனர். எய்தல் அரிய இறைவனே எய்தியதால் செய்தல் அரிய செயலான-வெய்யகொடும் தான வரை வென்று தனியரசாய் மேலோங்கி வான வர்கோன் வாழ்ந்தான் வளர்ந்து. பெறுதற்கு அரிய முருகப் பெருமானேத் துணேயாகப் பெற்ற பொழுது வெல்லுதற்கு அரிய சூரன் முதலிய அசுரர்களே விண்ணுலக மெல்லாம் வியந்து புகழ்ந்து வர வென்று இந்திரன் இசை பெற்றிருக்கின்ருன். பெறலரும் பேறெனப் பெற்ற இராமனுல் விறலுயர் வாலியை விரைந்து வென்றுமுன் திறலுறு கதிரவன் சேய் விளங்கின்ை ; உறலுறு பொழுதுறும் உரிய யாவுமே.