பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 264 f உரிய வலி நிலைகள் உணர வந்தன. நெடிய நீரில் எவற்றையும் முதலே வெல்லும். அந்த நீர் நிலையை விட்டு வெளியே வரின் யாவும் அதனே எளிதே கொல்லும். இடம் அறிந்து வினேசெய்: அது அதிசய வலியுடை யது: அரிய உறுதி அருளுவது. ஆற்றல் இல்லாதவரும் அதல்ை ஆற்றல் உடை பராய் ஏற்றம் அடைவர் என்று இன்னவாறு இடத்தின் மாட்சியை முன்னம் கூறி வந்தார். இடம் வெறும் சடம்: அதற்கு இவ்வளவு பெருமையா ? இத்துனே ஆற்றல் அதற்கு உண்டா? என்று ஐயுறுவார்க்கு முதலையை ஈண்டு எடுத்துக் காட்டி இடத்தின் மதலேயை நன்கு துலக்கி யுள்ளார். நிலத்தின் வலிமையைத் தெளிவாக விளக்குதற்கு நீரின் நிலைமை விழி தெரிய வந்தது. கண்கூடான அனுபவக் காட்சி மனிதனே இனிது தெளிவிக்கின்றது. தமக்கு உரிமையான இடமே எவர்க்கும் எவைக்கும் வலிமையான உறுதி மிகுந்த தலமாம். நெடும் புனல் என்றது அதன் ஆழம் நீளம் தெரிய. ஏரி வாவி தடாகம் நதி முதலிய பெரிய நீர் நிலே களிலேயே முதலே வாழும். நீர்வாழ் உயிர்களுள் இது மிகவும் கொடியது. இடங்கர், வன்மீன், கரா என வேறு பேர்களும் பெற்றுள்ளது. நெடிய நீரில் வாழுகிற இது கொடிய மாறுபாடு உடையது ஆதலால் கடுமையான இதற்கு யாவரும் அஞ்சுவர். முதலேக்கு இல்லே நீத்தும் நிலையும். (நறுந்தொகை) நெடும் புனலுள் வாழுகின்ற இதன் நிலைமையை இது துலக்கியுளது. அச்சமும் காணமுமின்றி மூர்க்கர் யாண்டும் மூண்டு திரிவதுபோல முதலேயும் முரணுய்த் திரியும் என்பதை இதல்ை அறிந்து கொள்கின்ருேம். மூர்க்கனும் முதலையும் கொண்டதை விடா. என்பது முதுமொழியாய் நீண்டு வங்துள்ளது. 331 -