பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 2659. கேளினை நோக்கல் செய்யான்; சினைவரால் கெளிறு பாயப் பா8ளவாய் விரியும் பூகப் படப்பைசூழ் மகத வேந்தே. (1) பரந்ததன் பழியை நோக்கும்; படிந்ததன் பழியேபோலச் சுரும்பொடு வண்டு பாடச் சொரிமதம் செருக்கித் துஞ்சாக் கருங்களிற் றீட்டமெல்லாம் களத்திடைக் கவிழ்ந்து துஞ்சி இரும்பெருங் குருதிச் சேற்றின் இடையிடைக் குவிதல் நோக்கும். (2) அற்றதன் புகழை நோக்கும்; அற்றதன் புகழே போலக் கற்றைவெண் ணிலவு கான்ற கவிகையும் கவரிக் காடும் ஒற்றைவெள் வளையும் சிந்தி ஒழுகொளி யோடைநெற்றிக் கொற்றமால் களிறு மாய்க்கும் குருதியா ருெழுகல் நோக்கும். இன்னன பலவும் நோக்கி எள்ளினன் அரசின் வாழ்க்கை மன்னிய சிறப்பு வாய்ந்த மாதவம் புரிதல் நன்றென்று உன்னினன் மற்றென் என்செய்வான் ? ஒளிறுவெள் ளருவி மாலைப் பொன்னெடுங் குன்றம் நோக்கிப் போவது புரிந்தான் மன்னே. (4) (பாகவதம் 10-21) நீண்ட படைகளோடு மூண்டுவந்து போராடிப் படைகளேயிழந்து பழிபல படிந்து அழிதுயர்களோடு இவன் மீண்டு போயுள்ளமையை இவற்ருல் உணர்ந்து கொள்கிருேம். உறுபடை யுடையான் எனினும் சிறு படையான்செல்இடம்,சேரின் அல்லலுழந்து அழிவான் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்ருன். சேர்ந்த படைச்செருக்கால் சேரா இடம்சேரின் ஆர்ந்த அழிவாம் அது. தானம் அறியாவிடின் தானே அழிவுறும். 499 நின்ற விராடன் நிலத்தில் சுயோதனன்போய்க் குன்றியேன் மீண்டான் குமரேசா-ஒன்றும் சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோ டொட்டல் அரிது. (க) இ-ள். - குமரேசா விராடன் நகரில் போய்த் துரியோதனன் வெல்லமாட்டாமல் ஏன் வெட்கி மீண்டான்? எனின்,