பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2660 திருக்குறட் குமரேச வெண்பா சிறை நலனும் சீரும் இலர் எனினும், மாந்தர் உறை நிலத்தோடு ஒட்டல் அரிது என்க. - அரண் அமைதியும் ஆன்ற சீர்மைகளும் இல்லாதவ ராயினும் நல்லமானிகளே அவர் உள்ள இடத்தில்போப் வெல்ல இயலாது. சிறை = அரண்: காவல். சீர் என்றது பொருள் படை முதலிய வளங்களே. உறை நிலம் = உரிமையாய்த் தங்கியுள்ள இடம். ஒட்டல்=பொருங்துதல்; கூடுதல். ஊக்கி வந்து தாக்கிப் போராடுதலே ஈண்டு இது குறித்து கின்றது. மாந்த என்றது வேந்தர் அல்லாதவளை. அரச பதவியும் ஆன் ற பாதுகாப்பும் செல்வம் பெருமை சீர்மை முதலிய சிறப்புக்களும் கிாைந்துள்ள வேந்தரும், அந்த நலன்கள் யாதும் இல்லாத மாங் தரை அவர் வாசமாய்த் தங்கி யிருக்கும் இடத்தில்போய் எளிதே வென்று விடமுடியாது. உற்ற இடம் உறுதிமிக வுடையது: தன்மேல் ஊறு செய்ய ஊக்கிப்போவது ஊனமே யாம். தான் சொந்தமாய்த் தங்கிப் பழகி வாழ்ந்து வருகிற இடம் எந்த மனிதனுக்கும் உறுதி ஊக்கங்களேத் தந்துகிற் கம்: அவனே யாரேனும் தாக்க நேர்ந்தால் வீருேடு வெகுண்டு எழுவன்: உயிரையும் வெறுத்து உருத்து கிற்பன்: சாதற்கும் அஞ்சாமல் தறுகண்மை பூண்டு அவன் மூண்டு நிற்கவே போராட வந்தவர் புறங்காட்டி ஒட நேர்வர். ஒட்டவங்த ஒட்டலர் ஒட்டாமல் ஒடி ஒழியும் படி உற்ற உறைவிடம் அவனுக்கு உறுதி தங்துள்ளது. அந்த உண்மை துண்மையாய் ஈண்டு உணர வந்தது. காட்டுப் பன்றியை வேட்டையாடச் சென்றவர் அது வெளியேறித் திரியும்போதுதான் அதனே வெல்ல வும் கொல்லவும் வல்லவராவர்; தன் இருப்பில் அது இருந்து கொண்டால் அதன் கிட்டநெருங்க அஞ்சுவர்: