பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

>ᏮᏮ + திருக்கறட் குமரேச வெண்பா உரைகளில் மருவியுள்ள பொருள் நயங்களேயும், அறிவு நலன்களேயும், உணர்ச்சி வேகங்களேயும் ஒர்ந்து உணர்ந்து கொள்ளவேண்டும். போர்முகத்தில் கொல் லத் தகாதவரைச் சுட்டிக் காட்டி அந்த ஒன்பது பேர் களுள் எட்டாவது இனத்தை நீ சேர்ந்து நிற்றலால் இன்று உன்னேக் கொன்று தொலேக்காமல் உயிரோடு விட்டிருக்கின்றேன்; உன் ஊரை நோக்கி ஒடிப்போ ! என்று இவ்வெற்றி வீரன் அவ்வெய்யவனே இகழ்ந்து விளம்பி யிருப்பது வியந்து சிந்திக்கத் தக்கது. சிறை நலனும் சீரும் இல்லாதவன் என்று விராட மன்னனே மாறுபாடாக எண்ணிவந்து சுயோதனன் அவமானம் அடைந்து மீண்டு போயிருக் கிருன் மாக்தர் உறைகிலத் தோடு ஒட்டல் அரிது என்பதை வேந்தர் எவரும் தேர்ந்து தெளிய இவன் நேர்ந்து விளக்கியுள்ளான். உரிய இடத்தில் உறைவோன் மிகவும் அரிய திறலின ம்ை. ஒன்னர் ஊருள் ஊறு புரியேல். 500 கண்டுடைந்த உத்தரனும் காவலர் மேல் பாய்ந்தனிகள் கொண்டுவந்தான் என்னே குமரேசா-மண்டி நின்ற காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாழ் முகத்த களிறு. (0) இ-ள். o குமரேசா : அஞ்சி ஒ டி ன உத்தரனும் சமர்க் களத்தில் வீழ்ந்த அரசரை ஏன் அடர்த்து வந்தான் ? எனின், கண் அஞ்சா வேல் ஆழ் முகத்த களிறு கால் ஆழ் களரில் நரி அடும் என்க. அரிய ஒர் அதிசயக் காட்சி தெரிய வந்துளது. அஞ்சாமையும் வேல்பட்ட தழும்பு முகத்தில் உள்ள தும் ஆகிய பெரிய மதயானே கால் அழுந்தும் சேற்றில் சிக்கின் சிறிய நரியும் அதனேக் கொல்லும்.