பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.66 திருக்குறட் குமரேச வெண்பா அச்சம் என்பதை யாதும் அறியாத உச்ச கிலேயது: உறுதி ஊக்கங்கள் உடையது: பொரு திறம் வாய்ந்தது: பல போர் முனைகளில் முனைந்து புகுந்து மூண்டு போராடி வென்று வெற்றி விருதுகளோடு மீண்டு வக் துள்ளது; அத்தகைய விறலுடைய வித்தக வேழம் ஈண்டு இத்தகைய கிலேயில் தெரிய வந்துளது. களிறு என்றது ஆண்மை நிறைந்த அதன் மேன்மை யுணர. வேழக் குளித்தே விதந்து களிறென்றல். (தொல்காப்பியம்) களிறு என்னும் பெயர் ஆண் யானேக்கு உரியது என ஆசிரியர் .ெ த ல் கா ப் பி ய ைர் அதன் பேராண்மையை இங்ங்ணம் குறித்திருக்கிரு.ர். விதிகளில் ஊர்வலங்களுக்காக அலங்காரமுடன் வைத்து வளர்த்து வருகிற கோயில் யானே அன்று இங்கே குறித்தது. கோவேந்தரும் குணநலன்களைக் கண்டு கொண்டாடி வருதற்குரிய அரிய குலவேழமாம். பிறப்பில் உயர்ந்தது; சிறப்பு மிகுந்தது: திடதைரி யங்கள் செறிந்தது; பேராண்மைகளோடு போராண்மை கள் புரிந்தது என ஈண்டு வந்துள்ள வேழத்தை நாம் உணர்ந்து கொள்கிருேம். இவ்வளவு மேன்மைகள் செவ்வையாய் மேவி யிருந்தும் இடம் அறியாமல் சென்றதால் சிறுமையாய் மடிய நேர்ந்தது. ஆண்மை ஆற்றல் அறிவு வீரம் முதலிய கிலேமை களில் தலைமை எய்தி யாண்டும் உயர்குலவேந்தராய் ஓங்கியிருந்தாலும் தமக்கு இயலாத இடத்தில் மயலாப் இறங்கில்ை தோல்வியும் பழியும் அடைந்து தொலேய நேர்வர் என்பது மேலே வந்துள்ள உவமையால் இங்கே தெரிய வந்தது. இடம் முதலிய எவற்றையும் முன்னதாக நன்கு எண்ணித் தெளிந்தே எவரும் வினை தொடங்க வேண் டும்; எண்ணியுணராமல் இறுமாந்து துணிந்து சென்ருல் ஏற்றமெல்லாம் இழந்து அவர் இழிந்து படுவர்.