பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6ே80 திருக்குறட் குமரேச வெண்பா காதல் இன்பத்துள் தங்கித் தீதறு 5 நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்க றின்மை அவாவின்மை என்ருங்கு இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை உடன்மரீஇ இருக்கை ஒருநாள் பெறும் எனின், 10 பெறுகதில் அம்ம! யாமே: வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து ஞாங்கர் ஞாங்கர் நின்றுழி நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பஇம் மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே. (ஆசிரியமாலே) குடிப்பிறப்பு முதலிய குணநலன்கள் வாய்ந்தவர்க ளோடு ஒருநாள் கூடி நான் இருக்கப்பெறின் இன்னுத பிறவியும் எனக்கு இனியதே என ஒரு பெரியவர் இதில் உணர்த்தி யிருப்பதை நாம் உவந்து காண்கின்ருேம். உடுக்கும் உடைபோல் குடிப்பிறப்பு என்று குறித் திருப்பது கூர்ந்து சிந்திக்க வுரியது. உடை மானம் காத்து மனிதனே மகிமைப் படுத்துகிறது. குடிப்பிறப் பும் அவ்வாறே சிறப்புறச் செய்கிறது.உடலுக்கு உடை போல் உயிர்க்குக் குடிப்பிறப்பு உயர்வு புரிந்துளது. இத்தகைய மாட்சி மருவியிருத்தலால் குடிப்பிறந்து என்று இதனே முதலில் குறித்தார். நல்ல குடியில் பிறந்திருந்தாலும் பொல்லாத பழக்கத்தால் குற்றம் உற நேரினும் நேரும். அவ்வாருன மாசு யாதும் இருக்கலாகாது என்பார், குற்றத்தின் நீங்கி என்ருர். குற்றத்துள் நீங்கி எனவும் பாடம் உளது. வடு=பழி; வசை. பரிதல்=நடுங்குதல்; ஒடுதல். வடுப்பரியும் என்றது பழிக்கு அஞ்சுகின்ற பண்பினே. நாண் =நாணம்; இலச்சை வெட்கம். பழி தீமைகளுக்குப் பயந்து மாசு படியாதபடி உள்ளம் கூசி ஒடுங்குதல் நாணம் என்க. நவைகள் கண்ணுதபடி மனிதனே நன்கு பாதுகாத்து எங்கும் மேன்மை அருளி வருவது நாணம் என வந்தது.