பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.98 திருக்குறட் குமரேச வெண்பா நான் ஒரு வனசரன்: உனக்கு யாதும் இடர் செப்பேன்: என்கினத் துரத்தி வந்த சிங்கம் இதோ மரத்தடியில் நிற்கிறது; இரவு கழிந்தால் அது போப்விடும்; அது: வரையில் நாம் இருவரும் இங்கே தங்கியிருக்கலாம் " என்று அவன் நயமாய்ச் சொன்னன். இவன் பயம் நீங்கி யிருந்தான். கீழே கின்ற சிங்கம் நெடுநேரம் ஆகியும் போகவில்லை. பத்திரன் என்னும் கங்தருவனே கவுதம முனிவர் சாபத்தால் அந்த உருவை அடைந்து வந்துள்ளமையால் பேசுதல் முதலிய உணர்வு நலன்கள் அம்மடங்கலிடம் மருவியிருந்தன. நடுகிசி யடைந்ததும் சிறிது கண்ணயர்ந்து இவன் உறங்கின்ை. சிங்கம் மேலே பார்த்தது. ' அவன் மிகவும் பொல்லாதவன்: அவனேக் கீழே தள்ளிவிடு; நான் போய் விடுகிறேன். " என்று அந்த வேடனே நோக்கி அது கூறியது. அதற்கு அவன் இசையவில்லை; நம்பினவனுக்கு மோசம் செய் வது நீசம், நான் நாசமடைய நேர்ந்தாலும் அங்த நீச வேலேயைச் செய்யேன் ' என்று அவன் நேர்மையா யிருந்தான். பிறகு இரவு இறுதியில் அவன் உறங்க நேர்ந்தான். இவன் விழித்திருந்தான். சிங்கம் இவனை நோக்கி ஏ ! நீ ஒரு அரசகுமாரன்; அவன் வேடன்: அவைேடு கூடியிராதே; அவனேக்கீழே தள்ளு ' என்று மெல்ல உரைத்தது. உடனே இவன் அவனைக் கீழே தள்ளி விட்டான்; விடவே 'அரியேறு அவ்வேடசீனப் பரிவோடு பார்த்துப் பாராட்டியது; இவனேக் கொடிய படுபாதகன் என்று எள்ளி யிகழ்ந்து போயது. தம் முடைய செயல்களே மனிதனுடைய உயர்வு தாழ்வுகளே உணர்த்துகின்றன என்பதை இங்த இருவரும் அன்று உணர்த்தி நின்ருர். பெ ரு ைமக்கு ம் சிறுமைக்கும் கருமமே கட்டளைக் கல் என்பதை இவரிடம் உலகம் கண்டு தெளிந்தது. விரிவை சேது புராணத்தில் காண்க. மதிமரபில் உயர்குடியில் பிறந்திருந்தும் மதிகெட்டு மாட்சி யின்றிப் பதிதய்ைத் தருமகுத்தன் தன்செயலால் பழிபட்டான்; படர்ந்த காட்டில்