பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2706 திருக்குறட் குமரேச வெண்பா சுகமுனிவர் இவ்வாறு இவனைக் குறித்துப் புகழ்க் திருக்கிரு.ர். அழகிலும் அறிவிலும் சிறந்த தனது அருமை மனைவியோடு அமர்ந்து இனிய போகங்களே நுகர்ந்து இவன் அரசு புரிந்து வந்தான். வருங்கால் விந்தமன் எ ன் னு ம் பேருடைய ஒரு விங்தையான மனிதன் இவனிடம் வந்து சேர்ந்தான். அவன் வஞ்ச நெஞ்சமும் சாதுரிய சாகசங்களும் உடையவன். பேசு வதில் சதுரன். தொழில் முறைகளேயும் அரச காரியங் களேயும் யாதும் அறியாத அவனுடைய வாய்மொழி களேக்கேட்டு மயங்கி இவன் அவ ன் மீ து பிரியம் மீதுர்ந்து பந்தி விசாரணைகளேக் கவனித்து வரும்படி பணித்தான். அருந்தவர்களுக்கு ஒருமுறை இவன் விருந்து புரிந்தான். அதில் புலையுணவை அவன் கலந்து வைத்தான். முனிவர் தெரிந்தார்: முனிந்து எழுந்தார்: கிலேமை யாதும் தெரியாத இந்த மடையனே மடமை. யாய்ச் சேர்த்து எங்கள் புனித நிலையைக் கெடுத்து விட்டாயே என்று கடுத்து வைதார். அதல்ை இவன் பரிந்து வருந்தின்ை: படுதுயரடைந்தான். மூடல்ை நேர்ந்த பீடைகள் என்று நாடும் நகரமும் வைதன. அறிவு அறியாரைத் தேறுதல் பேதைமை எல்லாம் தரும் என்பதை யாவரும் இவன் பால் தெரிந்து தெளிந்தனர். தேர்ந்த தொழிலறிவு தேருனைத் தேறினே ஆர்ந்த துயரமே யாம். வினையில் தேருதானே வீணே தேருதே. 508 கேதமனைத் தேர்ந்ததல்ை கேமதரன் பின்பிழிந்து கோதடைந்தான் என்னே குமரேசா-ஆதலினல் தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். (அ) இ-ள். குமரேசா தேராமல் தெளிந்த கேமதான் பின்பு ஏன் நீங்காத துன்பங்களே அடைந்தான் ? எனின், பிற அனத் தேரான் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் என்க. இடும்பை = கொடுக் துன்பம்.