பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 திருக்குறட் குமரேச வெண்பா உற்றதால் துரியோதனன் ஏன் துன்பம் - உற்றன் : எனின், தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் என்க. துயரம் நேராமல் உயர்க என்கின்றது. ஆராயாமல் ஒரு வ சீன த் தெளிவதும் ஆப்க்து தெளிந்தவனிடம் ஐயப்படுவதும் நீ ங் கா த கெடிகக் துன்பங்களைக் கடுமையாய் விளேத்து விடும். தேர்தல்=ஆராய்ந்து அறிதல். தேரான் என்றது ஈண்டு எச்சமாய் கின்றது. தேர்ந்து நிச்சயித்துத் தெளிந்து கொள்வது தெளிவு என வந்தது. தெளிவில் வழுவுறநேரின் அது பெரிய இழிவாய்இடர்களே புரியும். தெரிந்து தெளிதலே நல்லது தெரியாமல் தெளிவது எவ்வழியும் திதாம்: ஆகவே அதுவும் ஈண்டறியவந்தது. நல்லவன் என்று ஒருவனைத் தேர்ந்து தெளிந்து கொண்ட பின்பு காரியங்களே அவனே நம்பி விடவேண் டும்; நம்பாமல் அவன்மீது அரசன் சந்தேகம் கொண் டால், அவன் உள்ளம் உறுதி குலேயும்:ஊக்கம் குன்றும்: பிரியம் பிறழும்; நாம் எவ்வளவு உண்மையாயுழைத் தாலும் இவர் நம்மை நம்பவில்லை. ஐயுறுகிருர்' என்று வெய்துயிர்த்து அவன் விலக நேர்வன். அதல்ை வினைக் கேடுகளாம்: வெய்ய துயரங்கள் விகள்ந்து வரும். தேராமல் ஒருவனைத் தெளிவதும்: தெளிந்தவன் மேல் ஐயம் உறுவதும் தீராத கொடிய துயரங்களாம். ஆதலால் அவற்றை யாண்டும் அரசன் செய்யலாகாது என்பது ஈண்டு நன்கு தெரிய கின்றது. தேற லார்தமைத் தேறலும்; தேறினர்த் தேற லாமையும், என்றும் - மாற லாருடன் மலேதலும், மாறுடன் மருவி வாழ்தலும், முன்னே ஆற லாதன அரசருக்குஎன்று கொண்டு அரச நீதியிற் சொன்னர்; கூற லாதன சொல்வதென்? செல்வதென்? கொடியவன் அருகென்றன். (பாரதம்)