பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.30 திருக்குறட் குமரேச வெண்பா தேற்றம்=தெளிவான திடம்: துணிவு. தேர்ந்து தேறி ஒர்ந்து துணிந்து கொண்டது தேற்றம். கட்டே = கண்ணதே. பிறரிடம் தெளிவு கொள்ள லாகாது என்பதை ஏகாரம் தெளிவுறுத்தி கின்றது. காணுடையான் கட்டே தெளிவு என முன்னம் வங் துள்ளதையும் ஈண்டு எண்ணிக் கொள்ள வேண்டும். நான்கு நீர்மைகள் பாங்குடன் இங்கே பார்வைக்கு வந்துள்ளன. மா ன ச மருமங்களேத் துருவிநோக்கி உறுதி நலங்களே உணர்த்தி யிருக்கிரு.ர். வேந்துவினை யாடலில் விவேகங்கள் விளேயாடி வருகின்றன. அன்பை முன்பு வைத்தது ஏன் ? எனின், எல்லா இன்ப நலன்களேயும் அருளவல்ல அ த ன் உரிமை தெரிய என்க. தன்னைத் துணேயாக கம்பினவன்மேல் வினேயான னுக்கு அன்பு இல்லேயால்ை விச்சுவ வுருவன் போல் தன் இச்சைப்படியே ஏதேனும் கே டு விளேப்பன்: அவ்வாருன துன் பங்களே ஒழித்தற்கு அன்புரிமை வேண்டும் ஆதலால் அதனே முன்பு குறித்தார். அன்பு இருந்தாலும் ஆவன புரியும் அறிவு இல்லே யானுல் அந்தப் பிரியம் வறிதாய்ப் பிழைபடும் ஆத லால் அறிவை அதன்பின் முறையே அமைத்தார். அறிவு நன்கு அமைந்திருந்தாலும் அறிந்ததைத் துணிந்து செய்யும் ஆற்றல் இல்லேயானல் அது வழு வுறும் ஆதலால் தேற்றத்தை அதன்பின் நிறுத்தினர். இம்மூன்றும் இருந்தாலும் அவலமான ஆசை யிருப் பின் கட்டியங்காரன்போல் அனைத்தையும் கவர்ந்து கொள்ளத் துணிவன் ஆ த லா ல் அவாவின்மையை இறுதியில் உறுதியாய் அமைய வைத்தார். அரசனுக்கு உரிமைத் துனேவராய் கின்று எவ்வழி யும் செவ்வையாய்க் காரியம் புரியவுரியவர் சீசியல்