பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝736 திருக்குறட் குமரேச வெண்பா துக்கொண்டு அவர் விரைந்து மறைந்து போவர் என முன்துறையரையர் இங்ங்னம் வரைந்துகாட்டியிருக்கிரு.ர். அரசனது ஆட்சிக்கு உரிய காரியங்கள் அறிஞர் பலரால் செய்ய வுரியனவாய்ப் பெருகியுள்ளன. தக்க வினையாளர்களேத் தகுதியாகத் தேர்ந்து எடுத்து ஒர்ந்து கடத்திவரின் அரசுமுறை வரிசையாய் நடந்துவரும்: அரசனும் மகிமையுடையனாய் நன்கு விளங்கி வருவன். மாலமர் நெடுங்கடல் மதலே மாசிலாக் காலமைந்து ஒழுகுமேல் கரையும் கானுமே; நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல் வேலவர் ஒழுக்கமும் வேலே காணுமே. (சூளாமணி) கடலில் ஒடுகிற மரக்கலம் காற்ருல் இயங்கி வரு கிறது; அதுபோல் நிலத்தில் நடக்கிற ஆட்சிமுறை அறி வுடையரால் நெறியே நடந்துவர வேந்தன் வியனுப் விளங்கி வருகிருன். இத்தகைய வினையாளர்களேத் தேர்ந்து கொள்ளுவதில் கூர்ந்த மதியூகம் வாய்ந்து வரின் ஆர்ந்த நன்மையாய் அது நேர்ந்து வரும். நல்லவர் என்று பல்வகையிலும் ஆய்ந்து நம்பிக் கொண்டால் அல்லவராய் அல்லல் புரிபவர் பலர் உளர். இவ்வுண்மையைச் சந்திரனும் கட்டியங்காரனும் யாவரும் கண்டு வருந்த நேரே காட்டி நின்றனர். ச ரி த ம். வானவரின் வா ன ஒளியாய்ச் சந்திரன் வயங்கி வருகிருன். அழகும் அறிவும் இ னி.ய நீர்மைகளும் உடையவன். கலேகளே நன்கு கற்க விரும்பித் தேவ குருவாகிய வியாழ பகவானிடம் வந்தான்.அவர் இவனே நல்லவன் என்று தேர்ந்து தெளிந்து கற்பித்து வந்தார். வருங்கால் அவருடைய மனேவியாகிய தாரையைக் காத லித்துக் கலந்து மகிழ்ந்தான். பின்பு அவளேக் கவர்ந்து சென்ருன். மாணவனிடம் மனேவியை இழந்து அவர்