பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரி ந் து வினே யாடல் 2751 நன்மையாய் உயர்ந்து வருகின்றன. செயலாளரை. உயர்த்தி வருபவர் எவ்வழியும் சிறந்து வருவர். இது சுபன் முதலானவர் பால் தெரிய வங்தது. ச ரி தம். சுபன் என்னும் இவன் பாண்டி நாட்டிலே திருச் செந்துரில் இருந்தவன். செங்குங்தர் மரபினன். உண் மையும் திண்மையும் உறுதியும் ஊக்கமும் பொறுதியும் போர்த்திறனும் உடையவன். இவனுடைய கிலேம்ை நீர்மைகளே வினவி யறிந்து உறையூரி லிருந்து அரசு புரிந்த சோழ மன்னன் இவனே வினையாளனாக விழைந்து கொண்டான். படைத்தலைவனுக்கு உரிய பெருமைகளே இவனுக்கு அவன் உரிமையோடு உதவியருளின்ை. அவ் வேந்தன் ஈழ்நாட்டு அரசன் மேல் படையெடுக்க நேர்ந்த பொழுது இவன் ஆர்ந்த துணேயாய் நின்று ஆள்வினே புரிந்தான். அவன் வெற்றி பெற்று மீண்டான். இவ லுடைய வினையாண்மைகளே வி யங் து வேண்டிய மேன்மைகளே அரசன் உரிமையோடு செய்தான். ஆழநீள் கடற்கும் ஆங்கோர் அம்பிமேல் சென்றே அப்பால் சூழ்திருச் செந்தூர் உற்ற சுபன் என்பான்துணையாக்கொண்டு வாழி ராசாதி ராசன் மன்னவன் மருவ லான்தன் ஈழநாடு ஒருநாள் தன்னில் திறைகொண்டு ஈண்டுற்றகுந்தம். H (ஈட்டி எழுபது) இவனே வினையாளனுக்கிப் பெருமை செய்துவைத்து வேந்தன் மேன்மை யடைந்துள்ள உண்மையை இதில் துண்மையாய் ஒர்ந்து உணர்ந்து கொள்கின்ருேம். ஏகன். இவன் சோழ நாட்டிலே ஆற்றுார் என்னும் ஊரில் இருந்தவன். நேர்மையாளன். சீ ரி ய குணங்லன்கள் இவனிடம், சீர்மையாய் அமைந்திருந்தன. இவனது நீர் மையை அறிந்து வாணமுதலியார் என்னும் பெருஞ் செல்வர் இவனைத் தமக்குச் செயலாளகை அமைத்துக் கொண்டார். தலைமையான உரிமை யாவும் தந்திருந்த