பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277.8 திருக்குறட் குமரேச வெண்பா அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம் நிழல்மரம்போல் நேர் ஒப்பத் தாங்கிப்-பழுமரம்போல் பல்லார் பயன் துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன். (நாலடி 202) வெயில் வெப்பத்தைத் தான் தாங்கிக் கொண்டு தன் னே அடைந்துள்ளவர்கட்குக் குளிர்ந்த கிழலைத் தங் தருளும் குளிர் தருக்கள் போலவும், இனிய பழங்களே நல்கும் கனிமரங்கள் போலவும் தம்மை அடுத்தவரைத் தழுவி ஆதரித்து உதவி புரிந்து வருபவரே உத்தமமான உயர்ந்த மனிதராவர் என இது உணர்த்தியுளது. மரங் களின் தரங்களேக் கண்டாவது மனிதர் மதியுடன் வாழ. வேண்டும். உதவியாளர் உயர்ந்து திகழ்கின்ருர். சுற்றம் சூழ வாழ்பவரே செல்வம்பெற்ற பயனேப் பெறுகின்ருர். அவரை எல்லாரும் உவந்து புகழ்கின்ருச். இவ்வுண்மை மாலியவான்பால் தெரிய வந்தது. ச ரி த ம். இவன் அரக்கர்குல முதல்வன். சுகேசன் என்னும் வீரனுடைய புதல்வன். தா. ப் பெயர் தெய்வவதி. இவன் அறிவும் ஆற்றலும் உறுதியும் ஊக்கமும் உடை யவன். பருவம் எய்தியவுடன் பிரமனே கோக்கி அரிய தவங்களேச் செய்து பெரிய வர பலங்களே ப் பெற்ருன். தன் பெருமைக்கு ஏற்பத் தெய்வத் தச்சனேக் கொண்டு ஒர் அரிய நகரம் அமைத்தான். கடலிடையே யிருக்த அழகிய வளமான ஒரு தீவுள் திரிகூடம் என்னும் மலேச் சாரலில் தேவரும் ஆவலுறுமாறு சி ற ங் த நகரம் சமைத்து அதில் குடியேறினன். இலங்காபுரி என்னும் அந்த இராசதானியில் அமர்ந்து அரசு புரிய நேர்ந்த இவன் தனது மரபினரெல்லாரையும் அங்கே குடியேற்றி வரிசையோடு பேணினான். சுமாலி மாலி என்னும் துணேவர் இருவரும் இவனுக்கு மங்திரிகளாப் மருவி யிருந்தனர். சவுந்தரி என்னும் கங் தருவ மங்கையை மணந்து அரிய போகங்களே நுகர்ந்து இந்திரனும் தலே வணங்க யாண்டும் மாட்சியாய் இவன் ஆட்சி புரிந்தான்.