பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2440 திருக்குறட் குமரேச வெண்பா பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னு; அரியவை செய்தும் என உரைத்தல் இன்னு; பரியார்க்குத் தாம்.உற்ற கூற்றுஇன்னு; இன்ை பெரியார்க்குத் தீய செயல். (இன்னுநாற்பது 27) பெரியார் தொடர்பைக் கைவிடின் அது பெரிய துயரமாம் எனக் கபிலர் இவ்வாறு கூறியுள்ளார். பேயோடு பழகுறினும் பிரிவது அரிது அரிது என்று துரயோர்கள் மொழிவரால் துளயோரும் புகழ்து யோர் ஆயோர்கள் பெருநட்பை அருந்தவத்தால் பெறல்அன்றி ஏயோஎண் மையில்கிடைப்பின் இகழ்வரோ இகழ்வில்லார். (குசேலம்) உள்ளம் துய நல்லாருடைய உறவு அரிய புண்ணி யத்தால் பெறவுரிய பெரிய திரு. அதனைப் பெற்றவர் எவ்வழியும் நழுவாமல் பேணிக்கொள்ள வேண்டும். பெரியாரைப் பேணுமல் பிழையாய்க் கைவிடின் அவ்வேந்தன் நொந்து வெந்துயருழந்து வருந்துவான். இவ்வுண்மை இந்திரன்பால் அறிய வந்தது. ச ரி த ம் . தேவராசனை இந்திரன் யாவரும் தொழுது ஏவல் புரிந்துவர விழுமிய கிலேயில் விளங்கி வருங்கால் ஒரு நாள் உல்லாச ஆடல்களில் உள்ளம் களித்திருந்தான். அதிசய அழகுடைய தெய்வ சபையில் தருண மங்கை யர் நடனம் புரிந்தனர். அரம்பை ஊர்வசி மேனகை திலோத்தமை என்னும் பேரழகிகள் பெருமித நிலையில் புரிந்த நாட்டியங்களேக் கண்டு களித்துப் பாட்டுக்களேக் கேட்டு மகிழ்ந்து அரியனேயில் அமர்ந்திருந்தான். அப் பொழுது அங்கே தேவகுருவான வியாழ பகவான் வங் தார். அவரைக் கண்டும் யாதும் மரியாதை செய்யாமல் அரச மமதையில் அமரர்கோன் களிமீதுர்ந்திருந்தான். இவனது கிலேமையை அறிந்ததும் அவர் நெஞ்சம் திரிங் தார். விரைந்து வெளியேறி அயலகன்று மறைந்து போனர். அவ்வாறு அவர் போகவே மதியிழந்த வான்