பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் துணைக் கோடல் 2439 பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி யுறும். (குறள், 639) உள்ளேயிருந்து பழுது எண்ணுகின்ற ஒரு மந்திரி, வெளியே கின்று வெல்ல முயல்கின்ற எழுபது கோடி பகைவரினும் தீயவன் என இது குறித்துள்ளது. பழுதில்லாத ஒரு நல்லவரைக் கைவிடுவது பல்லா யிரம் பேர்களேப் பகைத்துக் கொள்வதினும் தீமையாம் என இ.து உணர்த்தியுளது. இந்த இரண்டையும் இணேத்து எண்ணி அரசுக்குரிய வரிசையான அமைதி கிலேமைகளே ஆய்ந்து கொள்ள வேண்டும். அறிவு நலம் நிறைந்த பெரியோர் அரசனுக்கு கண் போன்றவர்; அவரைக் கைவிடின் விழியிழந்த குழு டய்ை ஒளியிழந்து அவன் இழிவடைய கேர் வன்; அவ் வாறு நேராதபடி எவ்வழியும் இதமான சீரிய மதிநலனே இ வி வா று தெளிவுறுத்தி யுள்ளார். ஒருவன் பல்லாரைப் பகைகொளினும் கொள்ள லாம்; ஒரு 5 ல் ல ள ர் தொடர்பைக் கைவிடலாகாது. எல்லா நலன்களேயும் ஈய வல்லது பெரியார் தொடர்பு: அது பிரிய நேரின் பெரிய துயரமே யாம். பெரியார்தங் கேண்மை பெருந்துனேயாம்; ஈண்டும் அரிதே மறுமையிலும் அஃதொப்ப தொன்றில்; பெரியார் தொடர்கை விடலிற் பெருங்கேடு எரிபோல் பகையானும் இல். (இன்னிசை) பெரியார் கேண்மை பெறலரிய ஒரு பெரும்பேறு: இருமையினும் இன்பம் தரும் பெருமையுடையது: யாண் டும் உரிமையுடன் இதனைப் போற்றிக் கொள்ள வேண் டும்; போற்ரு தொழியின் பொல்லாத அல்லலாம்: தியைப் போன்ற தீய பகைவரும் செய்ய முடியாத கொடிய துன்பத்தை அது செய்துவிடும் என்று இது குறித்துள்ளது பெரியார் தொடர்கைவிடல் பெருங்கேடு என்னும் இக்கவி இந்தக் குறளேயே எண்ணி வந்துளது.