பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2478 திருக்குறட் குமரேச வெண்பா ஏன் இனநலத்தால் இனிய இன்பம் எய்திர்ை? எனின், மனநலத்தின் மறுமை ஆகும்; மற்று அ.தும் இனநலத் கின் ஏமாப்பு உடைத்து என்க. மனத்தின் நலத்தால் மாந்தர்க்கு மறுமையின்பம் உண்டாம்; அந்த நலமும் இனத்தின் நலத்தால் வலிமை யடைந்து வரும். மறுமை என்றது புண்ணிய வுலகத்தை. இம்மை மறுமை என்னும் இருவகை கிலேயங்கள மன்பதைக்கு உரிமையாயுள்ளன. இந்த உடலோடுகூடி இவ்வுலகில் சுகதுக்கங்களே அனுபவித்து வருகிருேம். உடல் ஒழிந்தபின்-உயிர் செய்திருந்த புண்ணிய பலனே நுகரும் உலகம் சுவர்க்கம் எனப் பேர் பெற்றுள்ளது. நல்ல மனம் உடையவர் யாருக்கும் அல்லலே கினே யார், நல்லதே கருதுவார். அவருடைய சொல் லு ம் செயலும் எவ்வழியும் இனியனவாய் நன்மை தோய்ந்தே வரும். வரவே நல்ல புண்ணிய சீலரான அவர்க்குப் புத்தேளுலகம் உரிமையாய் இன்பம் ஊட்டும் ஆதலால் மனகலத்தின் ஆகும் மறுமை என்ருர். அ.தும்=அந்த மனநலமும். மறுமையின்பத்தைத் தரவல்ல பெருமையுடைய அம்மனநலமும் இனநலத் தால் இனிய பாதுகாப்பை யடைந்துள்ளது. ஒருவன் மனநலம் நன்கு உடையயிைனும் தீய இனத்தோடு அவன் சேரகேரின் அது கிலேகுலேந்து போம். அவ்வாறு இழிந்து போகாதபடி எவ்வழியும் செவ்வையாக இனிது பேணி வருவது நல்ல இனமே ஆதலால் இனங்லம் ஏமாப்பு உடைத்து என்ருர், ஏமம்=சேமம்; காவல். ஏமாப்பு என்பது இதனடியாய்ப் பிறந்து வந்துளது. இன்பமும் நீறும் பொன்னும் காவலும் இரவும் சேமமும் ஏமாப்பும் மயக்கமும் என்பன ஏமப் பெயரன வாகும். (பிங்கலந்தை) ஏமப் பேரூர். (தொல்காப்பியம், அகம் 37)