பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சிற்றி ன ஞ் சேரா ைம 2485 யுயர்ந்துள்ள மேலோரே நல்லவர். அந்த நல்ல இனத் தைச் சேர்ந்து கொண்டால் எல்லா நன்மைகளையும் மேன்மைகளேயும் இனிதே அடைந்து கொள்ளலாம். அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும் உடங்குடம்பு கொண்டார்க் குறலால்-தொடங்கிப் பிறப்பின்ன தென்றுணரும் பேரறிவி னுரை யுறப்புணர்க வம்மாவென் நெஞ்சு. (நாலடி 173) உலகப் புலேகளே உணர்ந்து தெளிந்து பிறவியை நீக்க முயல்வோரே பெரியோர் அந்தப் பேரறிவாளரைச் சேர்ந்து உய்தி பெறுக என்று தன் உள்ளத்தை நோக்கி ஒரு புலவர் இவ்வாறுஉரிமையுடன் வேண்டியிருக்கிருர். சிற்றினம் என்றதற்கு ஏற்பப் பேரினம் என்று நேரே குறியாமல் நல்லினம் என்று குறித்துள்ளார். பெருமை மேன்மை சால்பு என்பன எல்லாம் நன்மை தரும் தன்மையால் நன்கு நேர்ந்துள்ளன. நில நலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம் குல நலத்தால் ஆகுவர் சான்றேர்-கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்ருண்மை தீயினம் சேரக் கெடும். (நாலடி 179) தீக்காற்று கப்பலேச் சிதைத்தல்போல் செப்பமுடைய சான்ருண்மையையும் தீ யி ன ம் கெடுத்து விடும் : அந்தப் புலே இனம் கொடியது என இது குறித்துளது. அல்லற் படுப்பது உம் இல் என்றது தீயினத்தின் பொல் லா த அழிதுயரங்கள் அறிய கின்றது. நல்லிணக்கம் அல்லது அல்லற் படுத்தும். (கொன்றைவேந்தன் 48) பொன்னே எனினும், புகுமிட னுற்கழல் மன்னர் முடிபோல் மதிப்புறல் இல்லேயால்; என்ன பெருமை யிருப்பினும், சிற்றினம் மன்னிற் கெடுமே மதிப்பு. (இன்னிசை) மணமனே சேர்மன மாலே மாண்புறும்; பினவனத் தார்இழி வெய்தும்; பெற்றியார் கணமதிற் சேர்ந்தவர் கணங்கொண் டோங்குவர்; குனமிலார் இனமுறல் குறையுண் டாக்குமே. (நீதிநூல்)