பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2486 திருக்குறட் குமரேச வெண்பா பன்றியொடு கூடினுல் பசுங்கன்றும் ஈன மலம் படிந்து தின்னும் என்றெழுந்த பழமொழிதான் இழிதொடர்பின் விளைவுகளே எளிது கான ஒன்றிவந்தோர் போதனையாய் ஒங்கியுளது; உண்மைதனே உணர்ந்து நாடி நன்றுயர்ந்த வழிகளிலே என்றுமே பழகிநீ நலமாய் வாழ்க. (இந்தியத்தாய் நிலே) சிற்றினத்தைச் சேராமல் விலகி நல்லினத்தைச் சார்ந்து உயர்ந்து கொள்ளுக என இவை உணர்த்தி யுள்ளன. Villainous company hath been the ruin of Ine. (Shakespeare) தியினம் என்னேக் கெடுத்துவிட்டது என இது குறித்துளது. குறிப்பைக் கூர்ந்து ஒர்க. A bad neighbour is as great a misfortune as a good one is a great blessing. (Hesiod) நல்லவுறவு பெரிய பாக்கியம்: கெட்ட சார்பு கொடிய கேடு என்னும் இது இங்கே ஒர்ந்து உணர வுரியது. நல்இனம் இன்பமாம்: திய இனம் துன்பமே தரும். இவ்வுண்மையை நெடுமாறன் அறிந்து தெளிந்தான். ச ரி த ம் . ' இவன் மதுரையிலிருந்து அரசு புரிந்த பாண்டிய மன்னன். உருவ அழகிலும் உலகியலறிவிலும் சிறந்த வன். பெரிய போர் வீரன். முதுகில் சிறிது கூன் இருக் தமையால் கூன் பாண்டியன் என்று இவன் பேர்பெற்று நின்ருன். அக்காலத்தில் கல்வியறிவிலும் துறவுகிலேயி லும் தலைசிறந்திருந்த சமணர் பலருடன் இவன் பழகி வந்தான். அந்தப் பழக்க வாசனேயால் சமண சமயக் கொள்கைகளே இவன் தழுவ நேர்ந்தான். பரம்பரையாய் உவந்து பேணிவந்த சைவ சமயத்தை ஒருவி அருகமதத் தை இவன் மருவி வருதலே அறிந்து அரசி உளம்மிக மறுகினுள். மங்கையர்க்கரசி என்னும் பெயருடைய அவ்: