பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 2493; பீடும் பெருமையும் பெற்று வந்தன. இவனது ஆட்சியி: லிருந்த மக்கள் யாவரும் செல்வ வளங்களில் சிறந்து யாண்டும் ம கி ழ் ச் சி மீதுர்ந்து வாழ்ந்து வங்தனர். மன்னன் தொட்டால் மண்ணும் பொன்னும் என வெளி நாட்டவரும் இவனே வியந்து புகழ்ந்தனர். எவர் வந்து எதைக் கேட்டாலும் இல்லே என் மைல் உள்ளம் உவந்து வழங்கி வந்தமையால் பெரிய கொடை வள்ளல் என்று உலகம் எங்கும் இவன் புகழ் பரவிநின்றது. காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனுர் என்னும் சங்கப்புலவர் இவனது ஈகையை வியந்து ஒகை மீதுார்ந்து பாடியுள் ளார். அயலே வருவதை ஆய்ந்து காணுக. இன்று செலினும் தருமே; சிறுவரை நின்று செலினும் தருமே; பின்னும் முன்னே தந்தனென் என்னுது, துன்னி வைகலும் செலினும் பொய்யல கிை யாம்வேண்டி யாங்கு எம் வறுங்கலம் நிறைப்போன்; தான் வேண்டி யாங்குத் தன் இறை உவப்ப அருந்தொழில் முடியரோ திருந்துவேல் கொற்றன்; இனமலி கதச் சேக் களைெடு வேண்டினும், களமலி நெல்லின் குப்பை வேண்டினும், 10 அருங்கலம் களிற்ருெடு வேண்டினும், பெருந்தகை பிறர்க்கும் அன்ன ஆறத்தகை யன்னே; அன்னன் ஆகலின், எந்தை உள்ளடி முள்ளும் நோவ உருற்க; தில்ல ஈவோர் அரிய இவ் வுலகத்து 15 வாழ்வோர் வாழ்வு அவன் தாள்வாழியவே. (புறம்.171) 5 இந்தப் பாடலில் பொதிந்துள்ள பொருள் நயங்களே ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். திருந்துவேல் கொற்றன், பெருந்தகை எனக் குறித்து இவனுடைய அருந்தொழிலாண்மைகளேயும், அரிய கொடை வண்மை களேயும், பெரிய குண நீர்மைகளேயும் கவிஞர் வியந்து புகழ்ந்துள்ளார். ஆவதை ஆய்ந்து நோக்கி யாண்டும் ஊதியம் ஓங்கி வர ஒர்ந்து புரிந்து செல்வங்களேயிட்டிப் பல்லோர்க்கும் ஈந்து நல்லோர் எல்லாரும் போற்றிவர