பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ கா டு ங் ேக ா ன் ைம 2927 நிறை கடல் அவனி பாரம் நீக்கிய நெடும்பொற் றின்டோள் இறையவன் இராமன் அன் போடு இளவலே எய்த நோக்கி அறைகழல் தாரோய்! நாட்டில் அன்பு நாள் தோறும் நாடி முறைசெய்கை இராச தன்மம் அதனில் நாம் முயறும் (என்ருன் . (இராமா : உத்தர : 13-1) இராச தருமத்தைக் குறித்து இராமர் இவ்வாறு தம்பிக்குப் போதித்திருக்கிருர். நாட்டில் அன்பு பூண்டு நாள்தோறும் நாடி அரசன் முறை செய்ய வேண்டும் என்று இதில் காட்டி யிருப்பது கண்டு மகிழ வுரியது. அரசன் நீதிமுறை புரிந்துவரும் அளவே அங்த நாடு சிறந்து பல வளங்களும் சுரந்து வரும்; முறை செய் யாது ஒழியின் எவ்வழியும் இழிந்து வெவ்விய காடாப் அது விளிங்து கெடும். கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்தியல் இழந்த வியன் நிலம் போல வேனிற் கிழவனுெடு வெங்கதிர் வேந்தன் தான லந் திருகத் தன்மையிற் குன்றி முல்லேயும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப் பாலே என்பது ஒர் படிவம் கொள்ளும். (சிலப்பதிகாரம் 11-60) நாள் தோறும் நாடி முறை செய்யாமல் நெஞ்சம் கோடி நிற்கும் கொடுங்கோலனுடைய நாடு போல நடுங்கு துயர் மிகுந்து பாலேவனமான காடு படு வெப் பமா யிருக்கும் என இது குறித்துள்ளது. வேந்து புரந்து வரும் கிலம் மாந்தர் மகிழ்ந்து வாழ முல்லையும் குறிஞ்சியும் மருதமும் போல யாண்டும் வளங்கள் பெருகி இன் பங்கள் கிறைந்திருக்கும்; அரசு முறை இழந்த நாடு அவலத் துயரங்கள் படர்ந்து அம்ெ கேடுகளாயிருக்கும் என ஈண்டு அறிந்து கொள்கிருேம். பார்த்திபன் நீதியோடு பார்த்துவரின் நாடு கீர்த்தி மிகுந்து வரும்: பாராது ஒழியின் அது பாழாய் அழியும்.