பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3008 திருக்குறட் குமரேச வெண்பா கல்லார் தனித்தனியே பிரிந்து கிடப்பின் விரைந்து தீமை செய்ய முடியாமல் அடங்கி யிருப்பர். நஞ்சைத் தொகுத்து வைத்ததுபோல் நெஞ்சம் திய அவரை ஒன்ரு கச்சேர்த்து வைத்து அரசனும் ஆதரவாய் நின்று விடின் அக் கொடியவர் நெடிய கேடுகளே நேர்ந்தபடி எல்லாம். துணிந்து செய்வர்; செய்யவே புலிகள் எதிர்ப்பட்ட புல்வாய்கள் போல் மக்கள் மறுகி அயர்வர்: வையமும் வெய்ய துயரமாய் வெதும்பி நையும். எல்லாவற்றையும் பொறுக்கின்ற பூமிதேவி வெரு வந்தன செய்கின்ற வெங்கோலனேப் பொருது மறுகு வள் என்றது, அவளது புனித கிலேமை தனியே இனிது தெரிய வந்தது. புண்ணிய நீர்மையள் ஆதலால் பாவி கஆளத் தாங்க மாட்டாமல் தளர்ந்து வருந்துகிருள். அரசுருப்புணர் அவுனரால் ஆற்றலள் ஆகிப் பரவை மாநிலப் பசுங்கொடி மல்லலம் சேதா உருவெடுத்தனள் உற்றனள் உற்றது கிளர்ந்தாள் மரை மலர்ப்பொகுட்டுறைதரு மறையவற்கு அன்றே. அலர்பசுந்துழாய் அணிமுதல் தேவுவந்து அளிக்கும் மெலியல் நீஎன வெண்திரைக் கருங்கடல் உடுத்த நிலமடந்தையை விடுத்தனன் நிறையிதழ்க் கமல மலரின் வந்தவன் மாண்டதன் பேருலகு அடைந்தான் (பாகவதம்) ஒரு காலத்தில் அரசர்கள் அசுரர்களாய் யாண்டும். மூண்டு நீண்ட தீமைகளேச் செய்தனர். செய்யவே, நில மகள் நெஞ்சம் பொருமல் மறுகி மலரவனிடம் போய் முறையிட்டாள். காப்புக் கடவுளாகிய திருமால் நல்ல காவலனுய் வந்து உன்னேக் காத்தருள்வார்! என்று பிரம. தேவன் தேற்றிவிடுத்தார். அவள் தேறிவந்தாள். அந்த உண்மையை இதில் உணர்ந்து கொள்கிருேம். பாட்டுள் காட்டியுள்ள காட்சிகளைக் கருதி ஒர்ந்து கொள்ளுக. அரசன் நிலமகளுக்குத் தலைமகன். அவன் செங். கோலய்ை நீதிமுறை புரிந்து எங்கும் மாந்தரை இனிது. பாதுகாத்துவரின் அவள் மகிழ்ந்து எவ்வழியும் வளம்.