பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஊ க்க ம் உ ைட ைம 3 1 2 1 நிலை யான நிதியின் நிலை தெரிய வந்தது. ஊக்கம் உடை மையே உறுதி யான செல்வம்: பொருள் உடைமைகள் நிலை யின்றி ஒழிந்துபோம். உண்மையான உடைமை எது? ேப ா லி ய | ன உடைமை எது? இந்தக் கேள்விகளுக்கு உரிய விடைகளே இதில் தெளிவாக அறிய வங்துள்ளோம். உள்ளம் என்றது இங்கே ஊக்கத்தை. மனத்தின் பெயர் அதன் எழுச்சியைக் குறித்து நின்றமையால் இஃது இட ஆகுபெயர். உள்ளக் கிளர்ச்சியால் ஓங்கி வருகிற உறுதிப்பாடு ஊக்கம் என வந்தது. மனிதனுடைய உயர்ச்சிக்கு மன எழுச்சியே காரணமாயுள்ளது. அந்த மானச தத்துவம் ஈங்கு மருமமாய் உய்த்து உணர வுற்றது. உடைமை என்றது பொருள்களே. மனிதன் உடுத்தி யிருப்பது உடை என வந்தது: அது போல் மனித வாழ்வுக்கு உரிமையாய் உ த வி புரிந்து வருவது உடைமை என நேர்ந்தது. ஊக்க மும் செல்வ மும் ஒரு சேர நேரே ஈண்டு நோக்க வந்துள்ளன. தம்மை உரிமையாக உடையவரை ஊக்க மும், பொருளும் உலகில் உயர்த்தி மதிப்பு மிகச் செய் யும்: மாட்சி தருவதில் இரண்டும் இவ்வாறு ஆட்சி புரி கபினும், முன்னது உயிர்க்குணமாய் உள்ளே உ ர ம் தோய்ந்து உறுதி கூர்ந்து நிலைத்து நிற்கும் ; பின்னது வெளியே வேறுபட்டு நின்று மாறுபாடுகள் நேர்ந்த அள வில் நிலை குலைந்து நீங்கிப்போம். கில்லாது நீங்கி விடுகின்ற செல்வத்தினும் என்றும் கிலேயாய் கின்று தலைமையோடு உறுதிபுரிந்து வருகிற ஊக்கமே அரசர்க்கு எவ்வழியும் மேலான ஆக்கமாம். ஊக்கம் முரண் மிகுதி ஒன்றிய நற்குழ்ச்சி ஆக்கம் அவன்கண் அகலாவால்-வீக்கம் நகப்படா வென்றி நலமிகு தாராற்கு அகப்படா இல்லே அரண் . (புறப்பொருள்: 6-6) 391