பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. ெச ங் கோ ன் ைம * 2863 புரிந்து யார் மாட்டும் தேர்ந்து செய்வ..தே முறை என் பதை உலகம் இவன் பால் நேரே உணர்ந்து நின்றது. தீது மகன் செயினும் தேர்ந்தவனைத் தண்டித்தல் நீதி யரசின் கெறி. செம்மையாளனே செங்கோலனும். கோனும் குடியும். 542. மண் டுபுகழ் அய்யோத்தி மாண்குடிகள் மன்னன்பின் கொண்டெழுந்தேன் போன குமரேசா-தண்டாத வாளுேக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. (உ) இ-ள். குமரேசா! அயோத்தியில் வாழ்ந்த குடிகள் அரசன் அகன்றபோது ஏன் அவன் பின்னே சென்றன? எனின், உலகு எல்லாம் வான் நோக்கி வாழும்; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் என்க. செங்கோலின் சீர்மை தெரிய வங்தது. உயிரினங்கள் யாவும் மழையால் வாழுகின்றன: குடிசனங்கள் எல்லாரும் அரசனுடைய நீதிமுறையால் வாழ்ந்து வருகின்றனர். வான் என்றது மழையை. வானில் உள்ள மேகம் பொழிகிற நீரை இங்ங்னம் இது குறித்துள்ளது. வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் மழையின் ம கி ைடி மாண்புகளே முன்னர் நன்கு அறிந்துள்ளோம். மழை பொழிய வில்லேயால்ை இவ்வுலகில் உயிர்கள் வாழ முடியாது. அரசன் நீதியாய் ஆளவில்லையானல் அந்த நாட்டு மக்கள் சுகமாயிருக்க முடியாது. வான் கோனுக்கும், மழை செங்கோல் நீதிக்கும், உலகம் நாட்டுக்கும், உ யி ர் க ள் குடிமக்களுக்கும் ஒப்பாம். வான் நோக்கி நிற்கும் உலகென்னவும் மன்னவன்செங் கோல்நோக்கி நிற்கும் குடிஎன்ன வும் கோதில் உம்பர்