பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ ா ல் 2865 தொல்லே மறை யவர் ஒழுக்கம் குன்றினரோ ? தவம்தருமம் சுருங்கிற் ருலோ ? இல்லறனும் துறவறனும் பிழைத்தன வோ ? யான் அறியேன் எந்தாய் ! எந்தாய் ! (2) -- (திருவிளையாடல் 56) மன்னன் இன்னவாறு மறுகி உருகி அழுது துதிக் கவே பரமன் அருளால் ஒர் ஒலி வானிலிருந்து நேரே எழுந்தது: " பாண்டியா ! ஈண்டு யான் வங்திருப்பது இடைக்காடனுக்காக; அவன் என் பால் அன் பன்; பெரிய புலவன்: அவனுடைய கவிகளே நீ செவி ஏற்றும் மதியா திருந்தது பெரிய பிழை; ஒரு நாட்டு மன்னன் அங்காட் டுக்கு உரிய மொழியைப் பெற்ற தாயைப்போல் பேன வேண்டும். மொழி காத வடிவம்: உணர்வின் ஒலி: உயிரின் ஒளி; அதைப் பயின்று தெளிந்த புலவர்களே ப் போற்றுவதே மொழியைப் போற்றுவதாம்; மொழி மதிப்பாய் உயர்ந்தால் மக்கள் மதியால் உயர்வர்: மக் கள் உயர, நாடு உயரும்; நாடு உயர, மன்னன் உயர் வான். இந்த உண்மைகளே நீ தெளிந்து கொள்ள வேண்டும் ' என்று வானெலி மொழிந்து கின்றது. கேட்ட வேங்தன் வியந்தான். மீண்டும் கீழே விழுந்து பணிந்தான்; புலவரையும் தொழுது போற்றினன். இறைவன் பழையபடியே கோயில்கொண்டருளின்ை. தான் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று இடைக்காடர் முதலாகச் சங்கப் புலவர் எல்லா ரையும் வேங்தன் விழைந்து பணிந்து வேண்டினன். யாவ ரும் மன்னனது பெருங்தகைமையை வியங்து புகழ்ந்தார்: உறவுரிமையுடன் பழைமைபோல் சூழ்ந்து வாழ்ந்து வந்தனர்.தன்சீனத் துறந்துபோன தமர் அமராமைக்கு உரிய காரணம் நீங்கவே பூரண வுரிமையுடன் அவர் ஆர்வமாய் உறவு பூண்டு நிற்பர் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து கின்றது. - பிரிந்த உறவினர் பின்பு திருந்தப் பரிந்து வருவர் பசந்து. உறவின் பிரிவு பரிவா யுறும்.