பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

86



திருக்குறளார் தெளிவுரை 74 6. அஞ்சுவது ஒரும் அறனே ஒருவனை வஞ்சிப்பது ஒரும் அவா. 366 மெய்யுணர்தல் முதலியன எல்லாம் எய்தி அவற்றால் வீடு எய்தற்குரிய ஒருவனை வஞ்சனையால் புகுந்து வீழ்த்தவல்லது, ஆசையேயாகும். ஆதலால், அந்த அவாவினை அஞ்சிக் காப்பதே துறவறமாகும். 7. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும். 367 ஒருவன் அவாவுக்கு அஞ்சி அதனை முழுதும் கெடுக்க வல்லவனானால், அவனுக்குக் கெடாமைக்குக் காரணமான வினை, தான் விரும்பும் நெறியாலே உண்டாவதாகும். 8. அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுஉண்டேல் தவாஅது மேன்மேல் வரும், 36B அவா இல்லாதவர்களுக்கு வருவதொரு துன்பம் இல்லை. அந்த ஒன்றும் இருந்துவிட்டால் எல்லாத் துன்பங்களும் இடைவிடாமல் வரும். 9. இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும் துன்பத்துள் துன்பம் கெடின். 369 அவா என்று கூறப்படுகின்ற மிகுதியான துன்பம் ஒருவனுக்குக் கெடுமானால், அவனுக்குப் பேரின்பு வீடு பெற்ற வழியேயன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையீடின்றி வந்துகொண்டே இருக்கும். 10. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். 370 ஒருபோதும் நிறைவு பெறாத தன்மையுடைய ஆசையினை ஒருவன் நீக்கிவிட்டால், நீக்கிய அச்செயல் அவனுக்கு அப்போதே எக்காலத்திலும் ஒரு நிலையில் நிலைத்திருக்கும் தன்மையைத் தரும்.