பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பாலில் இரண்டாவது இயலாக அமைக்கப் பட்டுள்ளது இல்லற இயலாகும். இந்த இயல் இருபது அதிகாரங்களைக் கொண்டதாகும். அவையாவன இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், புதல்வ ரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல், இனி யவை கூறல், செய்ந்நன்றியறிதல், நடுவு நிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறன்இல் விழை யாமை, பொறையுடைம்ை, அழுக்காறாமை, வெஃ காமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை யச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ். துறவற இயல், பதினான்கு அதிகாரங்களைக் கொண் டிருக்கின்றது என்பது முறையானாலும் முதல் பதின்மூன்று அதிகாரங்களைத் துறவற இயல் என்றும், ஊழ் என்ற அதிகாரத்தினை ஊழ் இயல் என்றும் கூறுவது மரபு. அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய் யுணர்தல் அவா அறுத்தல், ஊழ் என்ற இந்தப் பதி 'னான்கு அதிகாரங்களும் ஊழ் இயலில் அமைந்துள்ளனவா கும். - - திருக்குறளுக்குச் சிறந்த உரையாசிரியராகக் கருதப்ப டும் பரிமேலழகர் துறவற இயலில் முதல் ஒன்பது அதிகாரங்களையும் விரதம் (நோன்பு நோற்றல்) என்ற தலைப்பிலும், நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவா அறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களையும் "ஞானம்" என்ற தலைப்பிலும் அமைத்துள்ளார். . பொருட்பாலில் அரசியல், அங்க இயல், ஒழிபு இயல் என்பதாக மூன்று இயல்கள் அமைந்துள்ளன.