பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாவது இயலான அரசியலில் இருபத்தைந்து அதிகாரங்கள் உள்ளன. அவையாவன இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவு டைமை, குற்றம் கடிதல், பெரியாரைத் துணைக் கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலம் அறிதல், இடன் அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், சுற்றம் தழாஅல், பொச்சாவாமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, கண்ணோட்டம், ஒற்றாடல், ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை. பொருட்பாலில் இரண்டாவது இயலாக அமைந்துள் ளது அங்க இயலாகும். இந்த இயல் முப்பத்து இரண்டு அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவையாவன அமைச்சு, சொல்வன்ம்ை, வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினை செயல்வகை, தூது, மன்ன ரைச் சேர்ந்து ஒழுகல், குறிப்பு அறிதல், அவை அறிதல், அவை, அஞ்சாமை, நாடு, அரண், பொருள் செயல் வகை, படைமாட்சி, படைச் செருக்கு, நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல், பகைமாட்சி, புகைத்திறம், தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை, பெண் வழிச் சேறல், வரைவின் மகளிர், கள் உண்ணாமை, குது, மருந்து. பொருட்பாலில் மூன்றாவது இயலாக அமைந்துள்ளது ஒழிபு இயலாகும். இந்த இயலில் பதின் மூன்று அதிகாரங் கள் உள்ளன. குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்பு டைமை, நன்றியில் செல்வம், நாண் உடைமை,