பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

பாயிர இயல்3



அறத்துப்பால் பாயிர இயல் 3 1. 2. 2. வான்சிறப்பு (மழையினது அருமை, பெருமை, பயன் முதலியன) வான்நின்று உலகம் வழங்கி வருதலான் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11 மழை இடைவிடாமல் பெய்வதால் உலகிலுள்ள உயிர்கள் நிலைபெற்று வருகின்றன. ஆதலால், அம்மழையே அமிழ்தம் என்று அறியப்படும் தன்மை உடையதாகும். துப்பார்க்குத் துப்பு:ஆய துப்புஆக்கித் துப்பார்க்குத் துப்பு:ஆய தூஉம் மழை. 12 உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை உண்டாக்கிக் கொடுப்பதும், தானும் உண்பவர்களுக்கு உணவாக இருப்பதும் மழையேயாகும். . விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்(து) உள்நின்று உடற்றும் பசி. 13 ങുliഞ്ജ வேண்டுங் காலத்தில் பெய்யாமல் இருந்துவிட்டால், கடலால் சூழப்பம். இவ்வுலகில் பசியானது நின்று எல்லா .யிர்களையும் துன்புறுத்தும். . ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளம்குன்றிக் கால். 14 மழை என்கின்ற வருவாய் தன்னுடைய பயனைத் தராவிட்டால் 1.ழவர்கள் ஏரினால் உழமாட்டார்கள். . கெடுப்பதுடம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பது உம் எல்லாம் மழை. 15 பெய்யாமல் மக்களைக்கெடுப்பதும், கெட்டார்க்குத்துணையாய் நின்று, பெய்து காப்பாற்றுவதும் ஆகிய எல்லாம் மழையே யாகும்.