பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

4



திருக்குறளார் தெளிவுரை 4 6. விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது. 16 மேகத்திலிருந்து மழைத்துளிகள் வீழாவிட்டால் பசும்புல்லினது தலையையும் காணுதல் அரிதாகிவிடும். 7. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்காது ஆகி விடின். 17 மேகம் கடல் நீரைக் குறைத்து மீண்டும் அக்கடலில் மழைபெய்யாவிட்டால் பெரிய கடலும் தன்னுடைய தன்மையில் குறைந்து விடும். 8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18 மழை பெய்யாவிட்டால் வானவர்களுக்கும் இவ்வுலகில் நடைபெறுகின்ற சிறப்பான திருவிழாவோடு கூடிய பூசையும் நடக்காது. 9. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்காது எனின். 19 மழை பெய்யாவிட்டால் அகன்ற இவ்வுலகில் தானம் செய்வதும் தவம் செய்வதும் ஆகிய இரண்டு அறங்களும் நடைபெறா. 10. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. 2O எப்படிப்பட்ட மேலானவர்களுக்கும் நீரில்லாமல் உலகியல் நடைபெறாது. மழையில்லாமல், அந்நீர் இடைவிடாமல் ஒழுகும் ஒழுக்கும் அமையாது. 像