பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

பாயிர இயல்5



அறத்துப்பால் பாயிர இயல் 5 3. நீத்தார் பெருமை (முற்றுந் துறந்த முனிவர்தம் பண்பு, ஆற்றல், சிறப்பு முதலியன) 1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிபு. 21 சீரிய ஒழுக்கத்தில் நின்று துறந்தவர்களது பெருமையினை மேலான பொருள்கள் எல்லாவற்றுள்ளும் மேலானதென்று விரும்புவது நூல்களினுடைய துணிவாகும். 2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22 முனிவர்களது பெருமையினை எண்ணிப்பார்த்து இவ்வளவென்று கூறப்புகுந்தால், அச்செயல் இவ்வுலகில் இதுவரை இறந்தவர்களை எண்ணியறிய முயன்றது போன்றதாகும். 3. இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. 23 பிறப்பு, வீடு என்னும் இரண்டின் வகைகளை அறிந்து துறவறத்தினை மேற்கொண்ட முனிவர்களின் பெருமையே உலகத்தில் சிறந்ததாகும். 4. உரன்என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து. 24 அறிவு என்னும் அங்குசத்தினால் பொறிகளாகிய ஐந்து யானைகளையும் ஆசைகளில் செல்லாமல் காப்பவன் எல்லாவற்றிலும் மேலான வீடு என்னும் பேரின்ப நிலத்திற்கு ஒரு வித்து ஆவான். ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி, 25 புலன்களில் செல்லுகின்ற ஐந்து ஆசைகளையும் அடக்கியவனுடைய ஆற்றலுக்கு அகன்ற வானத்தில் உள்ளவர்களின் தலைவனான இந்திரனே சான்றாவான். (சாட்சியாவான்) 5,