பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்11



அறத்துப்பால் இல்லற இயல் 11 4. 6. வாழ்க்கைத் துணை நலம் (இல்லறத்திற்குரிய துண்ையான ಘಿ பெருமை, நற்பண்பு, கடமை முதலியன) மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 5i மனையறத்திற்குத் தகுந்த நற்குண நற்செய்கையான சிறப்பினையுடையவளாகித் தன்னைக் கொண்டவனது வரவுக்குத் தகுந்தபடி வாழ்பவளே வாழ்க்கைத் துணைவியாவாள். மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். 52 இல்லறத்திற்கேற்ற சிறப்பு மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்இல் வாழ்க்கை செல்வம் முதலிய வேறு வகைகளில் எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் பயனுடையதில்லையாகும். இல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? 53 மனைவி சிறப்புடையவளாக இருந்துவிட்டால் அவ் இல்வாழ்க்கையில் இல்லாத தொன்றுமில்லை. அவள் மனைக்குரிய சிறப்பு இல்லாதவளாகி விட்டால் இல்லறத்தில் உள்ளது ஒன்றுமில்லை. பெண்ணின் பெருந்தக்க யாஉள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். 54 கற்பு என்னும் கலங்காமையாகிய மனத்திண்மை இருந்துவிட்டால் பெண்ணைவிட உயர்வான (மேம்பட்ட) பொருள்கள் யாவுை உள? தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் மழை. 55 தெய்வத்தினைத் தொழாதவளாகிக் கணவனைத் தொழுது துயில்விட்டு எழுபவள் பெய்' என்று சொல்ல மழை பெய்யும்.