பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

12



திருக்குறளார் தெளிவுரை 12 6. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற 10. சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56 தன்னையும் காத்துக் கொண்டு தன்னைக் கொண்ட கணவனையும் பேணிப் பிறர் கூறும் நற்புகழுரைகளையும் போற்றிக் காத்துச் சோர்வு (இவைகளில் மறதி) இல்லாதவளே மனைவியாவாள். . சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. 57 மகளிரைச் சிறைவைத்துக் காத்தல் என்பது என்ன பயனைச் செய்ய முடியும்? நிறையென்னும் கற்பினால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதே தலையான காப்பாகும். பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. 58 பெண்டிர் தம்மைக் கொண்ட கணவனை வழிபட்டு வணங்கி வாழ்வாரானால், புத்தேளிர் வாழ்கின்ற உலகத்தில் அவரால் பெருஞ் சிறப்பினைப் பெறுவார்கள். . புகழ்புரிந் தில்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. 59 புகழ்வதற்குரிய மனையாளைப் பெறாத இல்வாழ்வார்களுக்குத் தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னே ஆண்சிங்கம் போன்ற பெருமிதமான நடை இல்லை. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. 60 மனைவியினுடைய நற்குண நற்செயல்களை இல்லறத்திற்கு மங்கலம் என்று கூறுவர். அந்த மங்கலத்திற்கு நன்மக்கள் பெறுதலை அணிகலம் என்று கூறுவர்.