பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்13



அறத்துப்பால் இல்லற இயல் 13 7. மக்கட்பேறு (நன்மக்களால் அடையும் இன்பமும், பயனும், சிறப்பும் பிறவும்) 1. பெறுமவற்றுள் யாம்அறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. 61 ஒருவன் பெறுகின்ற செல்வங்களுள் அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய சிறந்த மக்களைப் பெறுவது போன்ற மற்றச் செல்வங்களை யாம் மதிப்பது இல்லை. 2. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். 62 பழிக்கப்படாத சிறந்த பண்புடைய மக்களைப் பெறுவானானால் அவனுக்கு எழுகின்ற வருகின்ற - பிறவிகளிலெல்லாம் தீயவை அணுகா. 3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் விளையான் வரும், 83 தம் மக்களைத் தம்முடைய பொருள் என்று அறிந்தோர் கூறுவர். மக்களாகிய அப்பொருள் அவரவர்கள் செய்த வினைப்பயனால் உண்டாவதாகும். 4. அமிழ்திலும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். 64 தமது மக்கள் சிறு கைகளால் பிசைந்த சோறானது சுவையான அமிழ்தத்தினையும் விட மிகவும் இனிமையானதாக இருக்கும். 5. மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65 ஒருவனுடைய உடம்புக்கு இன்பமாவது தனது மக்களுடைய உடம்பினைத் தொடுதலாகும். அவர்களுடைய சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பமாகும்.