பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

14



திருக்குறளார் தெளிவுரை 14 10. , குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். 66 தமது குழந்தைகளின் ഗ്രൂത് சொற்களைக் கேட்டறியாதவர்கள் குழலோசையும் யாழோசையும் இனிமையாக இருக்கின்றன என்று கூறுவர். தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். 67 தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மை யாதென்றால் கற்றவர் நிறைந்த அவையில் அவரினும் சிறப்புற்று முற்பட்டிருக்குமாறு கல்வியுடையவனாகச் செய்தலாகும். தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. 68 தமது மக்களுடைய அறிவுடைமையானது தமக்கு உண்டாக்கும் இன்டத்தினைவிட உலகத்து உயிர்களுக்கெல்லாம் இனிமையானதாக இருக்கும். ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய், 69 தன் மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோன் என அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாயானவள் பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியினை விடப் பெருமகிழ்ச்சி அடைவாள். மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். 70 மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய உதவி என்னவென்றால், "இப்பிள்ளையைப் பெற இத்தந்தை என்ன நோன்பு நோற்றானோ?" என்று பிறர் சொல்லும் சொல்லினை உண்டாக்குவதாகும்.